எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
அகர்தலா : திரிபுரா சட்டசபை தேர்தலை முன்னிட்டு முதல்வர் மாணிக் சாஹா பேரணியாக சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.
60 தொகுதிகளை கொண்ட திரிபுரா சட்டசபைக்கான தேர்தல் வருகிற பிப்ரவரி 16-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக வேட்பாளர்களின் பட்டியலையும் வெளியிட்டு வருகின்றனர். இதன்படி, பா.ஜ.க. 48 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலையும், 6 வேட்பாளர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலையும் வெளியிட்டது. அதன் கூட்டணியில் உள்ள ஐ.பி.எப்.டி. கட்சி 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதேபோன்று, காங்கிரஸ் கட்சி 17 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை வெளியிட்டு உள்ளது. இந்நிலையில், திரிபுரா சட்டசபை தேர்தலுக்கான நட்சத்திர பிரசாரகர்களின் பட்டியலையும் பா.ஜ.க.வெளியிட்டது. இதன்படி, பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய மந்திரி நிதின் கட்காரி மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
இந்த பட்டியலில், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, யுவ மோர்ச்சா தலைவர் தேஜஸ்வி சூர்யா, திரை நட்சத்திரங்களான மிதுன் சக்ரவர்த்தி, மனோஜ் திவாரி, ஹேமமாலினி மற்றும் லாக்கட் சாட்டர்ஜி ஆகியோரும் சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்கான பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
சட்டசபை தேர்தலில், திரிபுரா முதல்வர் மாணிக் சாஹா பொர்தோவாலி நகர தொகுதியில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அவர் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய பேரணியாக சென்றார். இதன்பின்பு, தேர்தல் அலுவலகம் சென்ற அவர், அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் ஆகியோர் முன்னிலையில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


