முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சிகள் தொடர் அமளி - கூச்சல்: பாராளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

வெள்ளிக்கிழமை, 3 பெப்ரவரி 2023      இந்தியா
Parliament 2022 12-06

அதானி குழுமம் விவகாரம் தொடர்பாக நேற்றும் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி மற்றும் கூச்சலில் ஈடுபட்டதால் பாராளுமன்ற இரு அவைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டன.

2023ம் ஆண்டிற்கான பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3 தினங்களுக்கு முன் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. பின்னர் கடந்த 1-ம் தேதி பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல், நேற்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியது. அப்போது, அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், மக்களவை 2 மணிக்கும், மாநிலங்களவை 2.30 மணிக்கும் கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மீண்டும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், இரு அவைகளும் வரும் 6ம் தேதி காலை 11 மணி வரை ஒத்திவைத்து அறிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து