முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிகாரபூர்வ வேட்பாளரை கட்சியின் பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 5 பெப்ரவரி 2023      தமிழகம்
OPS 2022 12 29

Source: provided

சென்னை : அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும் என்று ஓ. பன்னீ்ர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஓ. பன்னீர் செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், 

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுக்கு இணங்க நீதிமன்றம் சார்பில் பொதுக்குழுவை கூட்டி முடிவெடுக்க நியமிக்கப்பட்ட அவை தலைவர் தமிழ்மகன் உசேன் இது சம்பந்தமாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியை அளிக்கிறது. எந்த உணர்வுடன் அவை தலைவர் அறவே நிராகரித்துள்ளார். 

பொதுக்குழு உறுப்பினர்களுக்கு யார், யார் வேட்பாளராக போட்டியிடுகிறார்கள் என்ற முழு விவரத்தையும் அளிக்க வேண்டியது அவரது தலையாய கடமையாகும். இதை சுப்ரீம் கோர்ட்டும் தனது தீர்ப்பில் உறுதி செய்துள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க. வேட்பாளராக செந்தில் முருகன் தேர்தல் அதிகாரி முன்பு மனு தாக்கல் செய்துள்ளார். அவை தலைவர் அளித்துள்ள வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம் பெறாதது மட்டுமல்ல, இன்னும் மனு தாக்கல் செய்யாத கே.எஸ். தென்னரசு பெயரை மட்டும் அ.தி.மு.க. அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவித்து இருக்கிறார். அதிகாரபூர்வ வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படி இருக்கும் போது முன்கூட்டியே அவை தலைவர் ஒருவரை அதிகராபூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால் அவர் முன்கூட்டியே ஒரு முடிவுக்கு வந்து விட்டார் என தெரிகிறது. இது நடுநிலை தவறிய காரியம் மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அறவே மீறுவதாகும். 

வேறு யாரேனும் வேட்பாளராக போட்டியிடுவதென்றால் பொதுக்குழு உறுப்பினர்களை முன்மொழியவும் அவற்றை அத்தகைய வேட்பாளர் ஒப்புக் கொண்டு நிற்பதற்குமான எந்த படிவமும் அவை தலைவரால் உருவாக்கப்படவில்லை. எங்களுக்கு அனுப்பிய தபாலோடு இணைக்கப்படவும் இல்லை. அப்படியிருக்க இதர வேட்பாளர் போட்டியிடுகிற உரிமையை அவை தலைவர் தட்டி பறிக்க எந்த அதிகாரமும் இல்லை. இதுவும் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு முரணானதாகும். 

வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கு பதிலாக ஒரு வேட்பாளரை அறிவித்து அவருக்காக பொது வாக்கெடுப்பு நடத்துவது சுப்ரீம் கோர்ட்டே எதிர்பார்க்காத ஒன்று. இந்த செயல் மூலம் அவை தலைவர் நடுநிலை தவறியது மட்டுமல்ல, சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர் என்ற பதவியையும் அறவே புறக்கணித்து விட்டு எடப்பாடி பிரிவினரின் முகவராகவே இயங்கி இருக்கிறார் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுவதில் அர்த்தமுண்டு. 

பொதுத் தேர்தலில் எவ்வாறு தபால் வாக்கு முறை செயல்படுத்தப்படுகிறதோ அதே முறையை அவை தலைவர் கடைபிடித்து இருக்கலாம். நேர்மைக்கு மாறான முறையில் வாக்குகளை பெற்று பெரும்பான்மையை காட்டுவது வேண்டுமென்றே திட்டமிட்டு செய்யப்படும் சதி செயல் என்று நம்புவதற்கு இடம் உண்டு. தேர்தல் முறை நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டும் என எண்ணும் நடுநிலையாளர்கள் இத்தகைய முடிவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். 

சட்டம் வெறுமனே செயல்படுத்தப்படுவது மட்டுமல்ல, அதற்கென உள்ள நெறிமுறையின்படி செயல்படுத்தப்பட வேண்டும். நெறிமுறை தவறி ஒரு சாராருக்காக ஒருதலைபட்சமாக நடத்தப்படுவதை சட்டத்திற்கும், நீதிக்கும் புறம்பான செயலாக பொதுக்குழு உறுப்பினர்கள் கருதுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து