முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாசி மக திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் 3 பெருமாள் திருக்கோயில்களில் தேரோட்டம்

திங்கட்கிழமை, 6 மார்ச் 2023      ஆன்மிகம்
Kumbakonam-1 2023 03 06

மாசி மகத்தையொட்டி கும்பகோணத்தில் உள்ள 3 பெருமாள் கோயில்களில் நேற்று காலை தேரோட்டம் நடைபெற்றது.

மகாமகம் தொடர்புடைய 12 சிவன் கோயில்கள், 5 பெருமாள் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறுவது மாசி மகமாகவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது மகாமக பெருவிழாவாகவும் குறிப்பிடப்படுகிறது. நிகழாண்டு மாசிமக விழாவை ஒட்டி கும்பகோணம் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் உள்ளிட்ட 3 கோயில்களில் கடந்த 26-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.

நேற்று முன்தினம் வரை பல்வேறு வாகனங்களில் தாயாருடன் பெருமாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. முக்கிய விழாவான மாசி மகத்தையொட்டி நேற்று காலை 9 மணி அளவில் சக்கரபாணி சுவாமி, ராஜகோபால சுவாமி, ஆதிவராக பெருமாள் கோயில்களில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சக்கரராஜா சக்கரராஜா என தேரின் வடம் பிடித்து இழுத்தனர். 

கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், மயிலாடுதுறை இணை ஆணையர் சு. மோகனசுந்தரம், மாநகர துணை மேயர் சு.ப. தமிழழகன்,கோயில் செயல் அலுவலர் ச.சிவசங்கரி உள்பட ஏராளமானோர் இதில் பங்கேற்றனர். காவல் ஆய்வாளர்கள் அழகேசன் மற்றும் சிவ. செந்தில்குமார் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து