முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் முறையாக மரியபோல் நகரில் ரஷ்ய அதிபர் புடின் ஆய்வு

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      உலகம்
Putin 2023 03 19

Source: provided

மாஸ்கோ : போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் உக்ரைனின் மரியபோல் நகருக்கு சென்ற ரஷ்ய அதிபர் புடின் அங்கு ஆய்வு மேற்கொண்டார். 

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஓராண்டை கடந்துள்ளது. போர் நேற்று 389-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். 

இதனிடையே, இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவியை வழங்கி வரும் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு பொருளாதார தடைகளையும் விதித்துள்ளன. போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன.

இதனிடையே, இந்த போரில் கிழக்கு உக்ரைனின் பல்வேறு நகரங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், போர் தொடங்கி ஓராண்டை கடந்த நிலையில் முதல் முறையாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுக்குள் நுழைந்துள்ளார். போரில் கைப்பற்றப்பட்ட உக்ரைனின் மரியபோல் நகருக்கு நேற்று ரஷ்ய அதிபர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டார். 

மரியபோல் நகரை ரஷ்ய படைகள் கடந்த ஆண்டு மே மாதம் கைப்பற்றியது. தற்போது மரியபோல் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் அந்த நகருக்கு அதிபர் புடின் திடீர் பயணம் மேற்கொண்டார். ரஷ்ய அதிபர் புடினின் இந்த பயணம் உக்ரைன் - ரஷ்யா போரில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து