முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேலம், விருதுநகரில் ஜவுளிப் பூங்காக்கள் : தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு

திங்கட்கிழமை, 20 மார்ச் 2023      தமிழகம்
PTR-2 2023 03 20

Source: provided

சென்னை : சேலத்தில் ரூ. 880 கோடி மதிப்பீட்டிலும், விருதுநகரில் ரூ. 1,800 கோடி மதிப்பீட்டிலும் ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில் வெளியிட்ட தகவலில், 

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் நலனில் இந்த அரசு தனிக் கவனம் செலுத்தி வருகின்றது. 76,356 கைத்தறி நெசவாளர்கள் பயன்பெறும் வகையில், அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 200-ல் இருந்து 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், 1.64 லட்சம் விசைத்தறி நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச மின்சார அலகுகள் 750 -ல் இருந்து 1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என தெரிவித்தார். 

மேலும் மேற்கு மண்டலத்தில் புதிய ஜவுளிப் பூங்கா ஒன்று அமைக்கப்படும் என அண்மையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் சேலத்தில் சுமார் ரூ. 880 கோடி செலவில் 119 ஏக்கர் நிலப்பரப்பில் ஒன்றிய மாநில அரசுகளின் நிதியுதவியுடனும் தனியார் தொழில் முனைவோர் பங்களிப்புடனும் இந்தப் பூங்கா அமைக்கப்படவுள்ளது.

தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் ஏறத்தாழ 1,800 கோடி ரூபாய் செலவில் கட்டமைப்பு வசதிகளுடன் ஜவுளிப் பூங்கா அமைத்திட 1,052 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிவடைந்து, ஒன்றிய அரசின் பங்களிப்புடன் இந்தப் பூங்காவின் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இந்த ஜவுளிப் பூங்காவின் மூலம் இரண்டு லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைத்தறிப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும், நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தவும், சந்தைப்படுத்தும் வாய்ப்புகளை ஏற்படுத்தவும் ரூ. 20 கோடி செலவில் 10 சிறிய கைத்தறிப் பூங்காக்கள் அரசால் நிறுவப்படும். 

மேலும், கைத்தறி மற்றும் துணி நூல் துறையில் மதிப்பு தொடரின் முழுமையான வளர்ச்சி, நவீன வடிவமைப்பு, துணிநூல் தயாரிப்பு இயந்திர உற்பத்தியை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களுடன் புதிய துணிநூல் கொள்கை ஒன்று வெளியிடப்படும் என்று தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 4 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 6 hours ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 3 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 4 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து