முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம் : அமைச்சர் பேச்சால் சுவாரஸ்யம்

செவ்வாய்க்கிழமை, 21 மார்ச் 2023      தமிழகம்
Budget-5 2023 03 21

Source: provided

சென்னை : மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம் என்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 - 2024 நேற்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். இதில் வெளியான அறிவிப்புகள்வருமாறு., 60,000 சிறு குறு மற்றும் நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு வேளாண் கருவிகள் தொகுப்பு ரூ.15 கோடி செலவில் வழங்கப்படும். பருவத்திற்கு ஏற்ற பயிர் மற்றும தொழில்நுட்பம் பற்றிய தகல்களை உழவர்களுக்கு தெரிவிக்க கிராம வேளாண் முன்னேற்ற குழுக்கள் அமைக்க ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கீடு

நெல்லுக்குப் பின்னான பயிர் சாகுபடிக்கு மானியமாக ரூ.24 கோடி வழங்கப்படும். நாமக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, புதுக்கோட்டை ஆகிய 5 மாவட்டங்களில் புதிதாக சிறுதானிய மண்டலங்கள் உருவாக்கப்படும். கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்களை சாகுபடி செய்து மாநில அளவில் அதிக விளைச்சல் பெறும் விவசயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும். இவ்வாறாக அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர், மாப்பிள்ளை சம்பா சாப்பிட்டா மாப்பிள்ளையாகலாம், தங்க சம்பா சாப்பிட்டா தங்கமாக இருக்கலாம் என்று கூற அவையில் உறுப்பினர்கள் உற்சாகமாக குரல் எழுப்பினர். சபாநாயகரும் அதனை ஆமோதித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து