முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பத்ம விருது பெற்றவர்களுடன் அமைச்சர் அமித்ஷா சந்திப்பு

புதன்கிழமை, 22 மார்ச் 2023      இந்தியா
Amitsha 2023 03 22

Source: provided

புதுடெல்லி : டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பத்ம விருது பெற்றவர்களை நேற்று நேரில் சந்தித்து இரவு விருந்தளித்து உபசரித்து உள்ளார்.

நாட்டில் உயரிய விருதுகளான பத்ம விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் நேற்று நடைபெற்றது. இதன்படி, பத்ம விபூஷண் விருது 6 பேருக்கும், பத்ம பூஷண் விருது 9 பேருக்கும் மற்றும் பத்ம ஸ்ரீ விருது 91 பேருக்கும் என மொத்தம் 106 பேருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு இருந்தன.

அவர்களில் தமிழகத்தின் பிரபல பாடகியான சமீபத்தில் மறைந்த வாணி ஜெயராமுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில், ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். இதன்படி, முன்னாள் மத்திய மந்திரி மற்றும் கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு (வயது 90), நாட்டின் 2-வது உயரிய பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.இதன்பின்பு, பத்ம விருது பெற்றவர்களை டெல்லியில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேரில் சந்தித்து பேசி, அவர்களுக்கு இரவு விருந்தளித்து, உபசரித்து கவுரவப்படுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 3 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 2 days ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 2 days ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 3 days ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 days ago
View all comments

வாசகர் கருத்து