எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: மனசாட்சியை உறங்க வைத்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்று ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை தாக்கல் செய்து முதல்வர் பேசினார்.
ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா நேற்று (மார்ச் 23) சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. இதன்படி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை தாக்கல் செய்து பேரவையில் பேசினார். அதில், "மிகவும் கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் நின்று கொண்டு இருக்கிறேன்! இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டு, அதிகப்படியான பணத்தை இழந்ததன் காரணமாக மனமுடைந்து, இதுவரை 41 பேர் தற்கொலை செய்து கொண்ட துயரமான நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறதே என்ற வேதனையோடுதான் எனது உரையை நான் தொடங்குகிறேன்.
சென்னையைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்ற இளைஞர், ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் 17 லட்சம் ரூபாய் வரை இழந்து, அந்தக் கடனைக் கட்ட முடியாமல் தற்கொலை செய்து கொண்டார். அவர் மரணத்துக்கு முன்னால் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்துவிட்டு, இறந்து போயிருக்கிறார். ''தயவு செய்து ஆன்லைன் ரம்மியை தடை செய்யுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
நாளுக்கு நாள் இந்த மரணங்கள் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நடக்கின்றன. இதனைத் தடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் சட்டத்தைக் கையில் வைத்திருக்கக்கூடிய இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பை உணர்ந்துதான், இணையவழி சூதாட்டத்தைத் தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக, தமிழ்நாடு அரசுக்கு அறிவுரை வழங்குவதற்காக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் கே. சந்துரு தலைமையில் ஒரு குழுவை தமிழ்நாடு அரசின் சார்பில் அமைத்தோம். அரசின் சார்பில் அமைக்கப்பட்ட இக்குழு 27-6-2022 அன்று தனது அறிக்கையினை என்னிடம் வழங்கியது. அந்த அறிக்கை அதே நாளில் அமைச்சரவைக் குழுவின் பார்வைக்காக வைக்கப்பட்டது.
இணையதள விளையாட்டைத் தடுப்பது தொடர்பாக அரசால் இயற்றப்பட்ட, உத்தேசிக்கப்பட்டுள்ள சட்டம் குறித்து பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மனநல ஆலோசகர்கள், சமூக ஆர்வலர்கள், இணையவழி விளையாட்டுத் தொழில் நிறுவனர்கள் ஆகியோரிடம் 7-8-2022 அன்று கருத்துகள் கேட்கப்பட்டது.
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலும், பள்ளிக் கல்வித் துறையில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு அடிப்படையிலும், இணையதள விளையாட்டு உரிமையாளர்கள் மற்றும் இதர தரப்பினரிடையே நடத்தப்பட்ட ஆலோசனையின்படியும், பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், ஒரு வரைவு அவசரச் சட்டம் தயாரிக்கப்பட்டு 26-9-2022 அன்று அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் அவசரச் சட்டம், 2022, கவர்னரால் அக்டோபர் 1, 2022 அன்று பிரகடனப்படுத்தப்பட்டது. இது தமிழ்நாடு அரசின் அரசிதழின் பகுதி IV, பிரிவு2-ல் அக்டோபர் 3, 2022-ல் வெளியிடப்பட்டது. அதன்பிறகு, மேற்கண்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக ஒரு சட்டமுன்வடிவு தயாரிக்கப்பட்டது. அதற்கு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 என்று பெயர்.
தமிழ்நாடு சட்டமுன்வடிவு எண்.53/2022 என்ற இந்தச் சட்டமானது கடந்த 19-10-2022 அன்று சட்டப்பேரவையில் உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டு, கவரனரின் ஒப்புதலுக்காக 26-10-2022 அன்று சட்டத் துறையால் அனுப்பப்பட்டது. இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் 23-11-2022 அன்று சில விளக்கங்களைக் கேட்டிருந்தார். இதையடுத்து அடுத்த 24 மணி நேரத்தில் உரிய விளக்கம் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சட்ட அமைச்சரும் 1-12-2022 அன்று கவர்னரை நேரில் சந்தித்து மீண்டும் விளக்கத்தை அளித்தார்.
ஆனால், சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை 131 நாட்கள் கழித்து, சில குறிப்புகளுடன் 6-3-2023 அன்று சட்டப்பேரவைத் தலைவருக்கு, கவர்னர் திருப்பி அனுப்பியுள்ளார். கவர்னர் எழுப்பியுள்ள கேள்விகளும், அதற்கான பதில்களும் அமைச்சரவைக் கூட்டத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டு, சட்டமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கும் கருத்துருவானது அமைச்சரவைக் கூட்டத்தில் வைக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2022ம் ஆண்டு தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தை தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவானது உறுப்பினர்களின் பார்வைக்கு மீண்டும் வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்படும். இதனை மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மாநிலத்தின் ஆளுகை எல்லைக்குள் உள்ள மக்கள் அனைவரையும் ஒழுங்குபடுத்தவும், நெறிப்படுத்தவும், காக்கவும் மாநில அரசுக்கு உரிமை உண்டு, மீண்டும் சொல்கிறேன் மாநில அரசுக்கு அந்த உரிமை உண்டு. மத்திய தகவல் ஒளிபரப்பு மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் எழுப்பிய கேள்விக்கு, 21-3-2023 அன்று பதில் அளிக்கையில், பந்தயம் மற்றும் சூதாட்டமானது, அரசியல் சட்டத்தின் 7-வது அட்டவணையில் உள்ள மாநில அதிகாரப் பட்டியலின் 34-வது பிரிவில் இடம் பெற்றுள்ளதால் இது தொடர்பாக சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இருக்கிறதென்று மிகத் தெளிவாக பாராளுமன்றத்தில் அறிவித்திருக்கிறார்.
மனச்சாட்சியை உறங்கச் செய்து விட்டு எங்களால் ஆட்சி நடத்த முடியாது என்பதை பிரகடனமாகவே இந்த மாமன்றத்தில் தெரிவிக்க நான் விரும்புகிறேன். எந்தச் சட்டத்தின் நோக்கமும் மக்கள் நலன் மட்டும்தான். மக்களைக் காப்பது ஒன்றே சட்டத்தினுடைய கடமை ஆகும். தமிழ்நாடு இணையவழி சூதாட்டத்தைத் தடை செய்தல் மற்றும் இணையவழி ஒழுங்குபடுத்துதல் வரைவு சட்டமுன்வடிவு, 2022 இம்மாமன்ற உறுப்பினர்கள் முன் வைக்கப்படுகிறது. இனியொரு உயிர் பறிக்கப்படாமல்; இனியொரு குடும்பம் நடுத்தெருவில் நிற்காமல்; இனியொரு நாள்கூட இந்த ஆன்லைன் அநியாயம் தொடராமல் இருக்க அனைத்து உறுப்பினர்களும் இந்தச் சட்ட முன்வடிவை ஆதரிக்க வேண்டுமென நான் கேட்டுக் கொள்கிறேன்." இவ்வாறு முதல்வர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மட்டர் பன்னீர் மசாலா12 hours 1 min ago |
கோபி மஞ்சூரியன்![]() 3 days 11 hours ago |
சிம்பிள் சிக்கன் கறி![]() 1 week 11 hours ago |
-
திரும்பிய பக்கமெல்லாம் ரத்தம், சடலங்கள்: ஒடிசா ரயில் விபத்து குறித்து உயிர் பிழைத்தவர் வேதனை
03 Jun 2023புவனேஸ்வர் : ஒடிசா ரயில் விபத்து குறித்து அந்த விபத்தில் இருந்து தப்பிய நபர் ஒருவர் தனது டுவிட்டர் பக்கத்தில் விபத்து குறித்த வேதனையை பகிர்ந்துள்ளார்.
-
நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடிய உக்ரைன் ராணுவ வீரர்கள்
03 Jun 2023கீவ் : உக்ரைன் ராணுவ வீரர்கள் நாட்டு நாட்டு பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 03-06-2023
03 Jun 2023 -
ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஏற்பாடு : மருத்துவத்துறை செயலாளர் பேட்டி
03 Jun 2023சென்னை : ஒடிசா விபத்தில் சிக்கி சென்னை வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்க செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மருத்துவத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி விளக்கம் அளித்துள
-
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரண நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து: சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்தார் பிரதமர் : காயமடைந்தோரை சந்தித்தும் ஆறுதல் தெரிவித்தார்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் ரயில் விபத்து நேரிட்ட பகுதிக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு ஆய்வு மேற்கொண்டார்.
-
ஒடிசா ரயில் விபத்து எதிரொலி: மத்திய அமைச்சர் பதவி விலக கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.
-
ஒடிசா ரயில் விபத்து: உலக தலைவர்கள் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்து: சிறப்பு ரயில்கள் மூலம் இன்று 383 பேர் சென்னை வருகை
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தொடர்ந்து சிறப்பு ரயில்கள் மூலம் 383 பேர் இன்று சென்னை வந்தடைகின்றனர்.
-
ரயில்வே என் குழந்தை போன்றது; ஆலோசனைகளை வழங்கத் தயார் : ஒடிசா ரயில் விபத்து பகுதியில் மம்தா பேட்டி
03 Jun 2023புவனேஸ்வர் : "ரயில்வே என் குழந்தையைப் போன்றது.
-
ஒடிசா ரயில் விபத்து வேதனையளிக்கிறது : ரஷ்ய அதிபர் புடின் இரங்கல்
03 Jun 2023டோக்கியோ : ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய அதிபர் புடின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசா ரயில் விபத்து காரணமாக 11 ரயில்கள் ரத்து: ரயில்வே அறிவிப்பு
03 Jun 2023சென்னை : ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து காரணமாக சென்னை, கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் ரயில்கள் உள்பட 11 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே துறை அறிவித்துள்
-
சென்னை வரும் பயணிகளுக்கு உதவ சென்ட்ரல், விமான நிலையத்தில் காவல் துறை சார்பில் ஏற்பாடுகள்
03 Jun 2023சென்னை : ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, சென்னை வரும் பயணிகளுக்கு உதவவும், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உதவவும், சென்னை பெருநகர காவல்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடுகள்
-
ரயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் : மத்திய அரசுக்கு அன்புமணி வேண்டுகோள்
03 Jun 2023சென்னை : ரெயில் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு ஆணையிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
-
ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவு : குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை: பிரதமர் மோடி
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிஷா ரயில் விபத்து குறித்து அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படு
-
பலி எண்ணிக்கை 288: ஒடிசா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவு: சீரமைப்பு பணி தொடக்கம்
03 Jun 2023புவனேஸ்வர் : தேசத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ள ஒடிசா ரயில் விபத்தில் மீட்புப் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாகவும், சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்து
-
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்தது தி.மு.க.
03 Jun 2023புவனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக தி.மு.க. தலைமை கழகம் நேற்று அறிவித்தது.
-
ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது : பாக். பிரதமர் ஷபாஸ் ஷெரீப் இரங்கல்
03 Jun 2023இஸ்லாமாபாத் : ஒடிசா ரயில் விபத்து மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது என பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
-
ஒடிசாவில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில் 2 முறை விபத்தில் சிக்கிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ்
03 Jun 2023பாலசோர் : ஒடிசாவில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒரே கிழமையில், ஒரே நேரத்தில், 2 முறை விபத்தில் சிக்கிய அதிர்ச்சி சம்பவம் தெரிய வந்து உள்ளது.
-
'நவீன தமிழகத்தை செதுக்கிய சிற்பி' - கருணாநிதியின் 100-வது பிறந்தநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
03 Jun 2023சென்னை : நவீன தமிழ்நாட்டை செதுக்கிய சிற்பி கருணாநிதி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
ம.தி.மு.க. பொதுச்செயலாளராக வைகோ மீண்டும் தேர்வானார் : முதன்மைச்செயலாளராக துரை வைகோ தேர்வு
03 Jun 2023சென்னை : ம.தி.மு.க. பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் வைகோ தேர்வு செய்யப்பட்டார். அக்கட்சியின் முதன்மைச் செயலாளராக துரை வைகோ தேர்வு செய்யப்பட்டார்.
-
127 கி.மீ. வேகத்தில் மாற்று தண்டவாளத்தில் சென்றதா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில்? - விபத்து குறித்த அதிர்ச்சி தகவல்கள்
03 Jun 2023புவனேஷ்வர் : சரக்கு ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில் சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் 127 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
-
ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
03 Jun 2023சென்னை : ஒடிசா சென்றுள்ள தமிழக குழுவுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை ஆலோசனையில் ஈடுபட்டார்.
-
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்து பயணித்த 1,257 பேர்
03 Jun 2023புவனேஸ்வர் : விபத்துக்குள்ளான இரு ரயில்களிலும் 2296 பேர் முன் பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 1,257 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தத
-
ஒடிசா ரயில் விபத்து காட்சிகள் நினைவை விட்டு அகலாது : உயிர் தப்பிய பயணிகள் அதிர்ச்சி பேட்டி
03 Jun 2023புவனேஸ்வர் : ஒடிசாவில் நேற்று முன்தினம் இரவு 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.