Idhayam Matrimony

நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்திய வடகொரியா

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      உலகம்
North-Korea 2023 03 24

Source: provided

சியோல் : கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. வடகொரியா தற்போது கடுமையான உணவு பஞ்சத்தில் சிக்கி தவித்தாலும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையில் ஈடுபட்டது. 

இந்த மாதத்தில் மட்டும் தொடர்ச்சியாக இந்த சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தென் கொரியாவும், அமெரிக்காவும் கொரியா தீபகற்ப பகுதியில் கூட்டாக ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா இந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கிறது. 

இதன் தொடர்ச்சியாக நேற்று நீருக்கடியில் புதிய அணு ஆயுத சோதனை நடத்தி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. கிழக்கு கடற்கரை பகுதியில் நீருக்கடியில் அணுசக்தி தாக்குதல் நடத்தும் டிரோன் பரிசோதனையை நடத்தி உள்ளதாக வடகொரியா அரசு ஊடகம் தெரிவித்து உள்ளது. கடலுக்கு அடியில் சுமார் 80 முதல் 120 மீட்டர் ஆழத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது. 

நீருக்குள் கதிரியக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வடிவமைக்கப்பட்ட இந்த டிரோன் அணுசக்தி போரில் எச்சரிக்கையுடன் செயல்படும் என அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்து உள்ளார். 

தென்கொரியாவும், அமெரிக்காவும் கூட்டாக பயிற்சி மேற்கொண்டு வரும் சூழ்நிலையில் வடகொரியா நடத்தி இருக்கும் இந்த புதிய அணு ஆயுத சோதனை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து