முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்கள் ஜூலை மாதத்தில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை : சட்டசபையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      தமிழகம்
anbil-2023-03-02

Source: provided

சென்னை : பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில்  அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார். 

தமிழக சட்டசபை கூட்டத்தொடரின் நேற்றைய நிகழ்வில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாணவர்கள் ஆப்சென்ட் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பதில் அளித்து பேசினார். அப்போது  அவர் கூறியதாவது:- 

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு பல்வேறு மாற்றங்கள் ஏற்ப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பள்ளிக் கல்வித்துறை மட்டுமின்றி அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆப்சென்ட்டான மாணவர்களை கண்டறிந்து ஜூலையில் துணைத்தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் குறைந்தபட்ச வருகைப் பதிவேடு 75 சதவீதம் இருக்க வேண்டும் என்பதை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாரத்தில் 3 நாட்கள் பள்ளிக்கு வராத மாணவர்கள் இனிமேல் கண்காணிக்கப்படுவார்கள். 

இடையில் நின்ற மாணவர்களில் 78,000 பேரை தொடர்ந்து கண்காணித்து தேர்வு எழுத வைத்துள்ளோம். பிளஸ் 2 பொதுத்தேர்வில் ஏன் இவ்வளவு மாணவர்கள் பொதுத்தேர்வு எழுத வரவில்லை என முதல்வர் தொலைபேசி மூலம் என்னிடம் கேட்டார். பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு அழைத்து வந்து தேர்வெழுத நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் இதுபோன்ற நிலை வரக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இடைநின்ற மாணவர்கள் மீது அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து