முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராகுலுக்கு சிறை தண்டனை விதிப்பு எதிரொலி: ஜனாதிபதியிடம் முறையிட காங்கிரஸ் கட்சி திட்டம்

வெள்ளிக்கிழமை, 24 மார்ச் 2023      இந்தியா
Congress 2023 03 24

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக ஜனாதிபதி திரெளபதி முர்முவிடம் முறையிட காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

பிரதமர் மோடியை அவதூறாகப் பேசிய வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து குஜராத்தின் சூரத் நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து, ராகுல் காந்தி தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட மாஜிஸ்திரேட் வர்மா, அவருக்கு 30 நாள் ஜாமீன் வழங்கி, அதுவரை தண்டனையை நிறுத்திவைக்க உத்தரவிட்டார். 

இந்நிலையில், இந்த விவகாரத்தை சட்ட ரீதியாக மட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் கையாள காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ராகுல் காந்திக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இதில், கட்சியின் மூத்த தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதில், டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி நேற்று (வெள்ளிக்கிழமை) ஊர்வலமாகச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. மேலும், ஜனாதிபதியை சந்தித்து அவரிடம் மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டு, இதற்காக ஜனாதிபதியிடம் நேரம் கேட்கப்பட்டுள்ளது. இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் மட்டுமின்றி, எதிர்க்கட்சிகளும் பங்கேற்க அழைப்பு விடுக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், வரும் திங்கள்கிழமை அனைத்து மாநிலங்களிலும் போராட்டம் நடத்தவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் இதனைத் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து