முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குனி ஆராட்டு விழா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறப்பு : இன்று கொடியேற்ற நிகழ்ச்சி

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      ஆன்மிகம்
Sabarimala 2022 12 18

Source: provided

திருவனந்தபுரம் : பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டது. இன்று திங்கட்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் நடைபெற்று வரும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை திருவிழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். 

இதுதவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் 5 நாட்களிலும், விஷு, ஓணம் பண்டிகை நாட்களிலும், பங்குனி ஆராட்டு திருவிழா நாட்களிலும் சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள், வழிபாடுகள் நடைபெறும். இந்த நாட்களில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து திரளான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். 

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 14-ம் தேதி திறக்கப்பட்டு 19-ம் தேதி அடைக்கப்பட்டது. இந்த நிலையில் பங்குனி ஆராட்டு திருவிழாவை முன்னிட்டு கோவில் நடை மீண்டும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திறக்கப்பட்டது. இன்று (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. 

கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உற்சவ பலி நடைபெறும். 10-ம் திருவிழாவான அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ம் தேதி பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறும். அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுடன் இரவு நடை அடைக்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 day ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து