முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம், புதுச்சேரியில் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம்

ஞாயிற்றுக்கிழமை, 26 மார்ச் 2023      தமிழகம்
Weather-Center 2021 12-05

Source: provided

சென்னை : தமிழகம்  மற்றும் புதுவையில் வரும் 30-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது,

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 27-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை 28 மற்றும் 30-ம்  தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி, மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும்.இவ்வாறு அதில் கூறப்படுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து