முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2022-23-ம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.15 சதவீதமாக உயர்வு

செவ்வாய்க்கிழமை, 28 மார்ச் 2023      இந்தியா
EPFO 2023 03 28

ஓய்வூதிய நிதி அமைப்பான இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதத்தை 8.15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2021- 2022 ஆண்டுக்கான வட்டி விகிதத்தை இபிஎஃப்ஓ 8.1 சதவீதமாக குறைத்திருந்தது. இந்த வட்டிவிகிதம் 2020- 21ம் ஆண்டில் 8.5 சதவீதமாக இருந்தது. இந்நிலையில், இபிஎஃப்ஒ, 2022-23 ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதி வட்டி வகிதம் 8.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

சிபிடியின் முடிவுக்குப் பின்னர், 2022 - 23 ஆம் ஆண்டுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிவிகித உயர்வு நிதியமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும். புதிய வட்டி விகிதம் நிதியமைச்சகம் மூலமாக அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற பின்னரே இபிஎஃப்ஒ புதிய வட்டி விகிதத்தை வழங்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து