முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நன்கொடை அளித்த வெளிநாட்டினரின் விவரங்களை அளிக்க வேண்டும் திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு நிபந்தனை

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      ஆன்மிகம்      இந்தியா
Tirupati 2023 03 30

நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை அளிக்க வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானத்திற்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது. 

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் உண்டியலில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துகின்றனர். இதேபோல் வெளிநாடுகளில் வாழும் ஏழுமலையானின் பக்தர்கள் தரிசனத்திற்கு வரும்போது அந்நாட்டு கரன்சி நோட்டுகளை உண்டியலில் செலுத்துகின்றனர். நேரில் தரிசனத்திற்கு வர முடியாத பக்தர்கள் ஆன்லைன் மூலம் காணிக்கை செலுத்துகின்றனர்.

வெளிநாட்டு பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் திருப்பதி தேவஸ்தானம் உரிமம் பெற்று இருந்தது. கொரோனா தொற்று காரணமாக 2018-ம் ஆண்டிற்கு பிறகு உரிமத்தை தேவஸ்தான அதிகாரிகள் புதுப்பிக்கவில்லை. இதனால் வெளிநாட்டு பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய ரூ.30 கோடி வெளிநாட்டு கரன்சிகள் தேவஸ்தானம் சார்பில் டெபாசிட் செய்ய முடியாமல் பாரத ஸ்டேட் வங்கியில் முடங்கி உள்ளது.

தங்களது பெயர்களை வெளியிட விரும்பாத சில பக்தர்கள் காணிக்கையை ஆன்லைனில் செலுத்தி உள்ளனர். பணம் செலுத்தியவர்களின் விவரம் தேவஸ்தான அதிகாரிகளுக்கு தெரியவில்லை. இதனால் வெளிநாட்டில் இருந்து ஆன்லைனில் பணம் செலுத்தியவர்களின் தகவல்களை தேவஸ்தான அதிகாரிகளால் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்க முடியவில்லை.

இந்த நிலையில் மதிய உள்துறை அமைச்சகம், வெளிநாட்டு பங்களிப்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் பெற்ற உரிமத்தை புதுப்பிக்காதது, விதிகள் மற்றும் விதிமுறைகளை பின்பற்றாதது மற்றும் உள்துறை வழிகாட்டுதல் படி வருமான விவரங்களை சரியானபடி சமர்ப்பிக்காததால் கிடப்பில் உள்ள ரூ. 30 கோடிக்கு, ரூ 3.19 கோடியை அபராதமாக விதித்தது.

இதையடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் நன்கொடை அளித்த வெளிநாட்டு பக்தர்களின் விவரங்களை துல்லியமாக அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் உரிமத்தை புதுப்பிக்க அனுமதி வழங்கி உள்ளது. மேலும் வங்கியில் கிடப்பில் உள்ள ரூ. 30 கோடியை தேவஸ்தானம் பெயரில் டெபாசிட் செய்யவும் பாரத ஸ்டேட் வங்கி ஒப்புதல் வழங்கி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து