முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்: வதந்தி பரப்பிய வாலிபர் பீகார் மாநிலத்தில் கைது: சென்னை அழைத்து வரப்பட்டார்

வியாழக்கிழமை, 30 மார்ச் 2023      தமிழகம்
Bihar-youth 2023 03 30

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய பீகார் வாலிபர் தமிழக போலீசாரால் கைது  செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டில் தங்கி இருந்து பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதால் தமிழகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக தமிழ்நாடு போலீசார் விசாரணை நடத்தி வதந்தி பரப்பியதாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர்கள் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்வதற்காக தேடி வந்தனர். இந்த நிலையில் அதில் ஒருவர் நீதிமன்றத்தில், முன்ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த மற்றொருவரான மணீஷ் காஷ்யப் என்பவரை பீகார் மாநிலம் பாட்னா சென்று தமிழ்நாடு தனிப்படை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தமிழ்நாடு தனிப்படை போலீசார் மணீஷ் காஷ்யப்பை பீகார் மாநிலம் பாட்னாவில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் சென்னை மாநகர காவல் ஆணையரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 1 week 1 day ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 13 hours ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 15 hours ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 day ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 day ago
View all comments

வாசகர் கருத்து