முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்த வைக்கம் போராட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2023      இந்தியா
Stalin 2022 12 29

Source: provided

திருவனந்தபுரம் : வைக்கம் போராட்டம் தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம் என்றும் இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா கேரளஅரசு சார்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க இருப்பதாக தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன்படி இந்த நிகழ்ச்சில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை கேரளா சென்றார்.

கொச்சி விமான நிலையத்தில் கேரள மாநில தொழில்துறை மந்திரி பி.ராஜீவி, கொச்சி மாவட்ட கலெக்டர் என்.எஸ்.கே. உமேஷ் ஆகியோர் வரவேற்றனர். வைக்கம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளிக்காவலாவில் உள்ள சத்தியாகிரகத் தலைவர்கள் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், வைக்கத்தில் உள்ள பெரியார் நினைவிடத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயனும் மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து வைக்கம் நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;-

"உடல் வேறு என்றாலும், எனக்கும் பினராயி விஜயனுக்கும் சிந்தனை ஒன்று தான். தமிழ்நாடு சட்டமன்றம் நடைபெற்று வரும் நிலையிலும், இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்துள்ளேன். வைக்கம் போராட்டம் என்பது கேரளாவின் சமூக நீதி வரலாற்றில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றிலும் மகத்தான போராட்டம். இந்தியாவுக்கே வழிகாட்டிய போராட்டம்.

மஹர் போராட்டத்தை நடத்துவதற்கு வைக்கம் போராட்டம் தான் தூண்டுகோலாக அமைந்தது என்று அண்ணல் அம்பேத்கர் பிற்காலத்தில் குறிப்பிட்டுள்ளார். சுயமரியாதை, சமூகநீதி போராட்டத்தின் துவக்கமான வைக்கம் மண்ணில் நிற்பதை பெருமையாக கருதுகிறேன்.  இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 4 days 12 hours ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 1 month 3 weeks ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 1 month 3 weeks ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து