முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்நாட்டு போரை பயன்படுத்தி சூடான் சிறையிலிருந்து தப்பித்த குற்றவாளிகள்

புதன்கிழமை, 26 ஏப்ரல் 2023      உலகம்
Sudan-1 2023 04 26

கார்ட்டூம், சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகார மோதல் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. இதன் காரணமாக சூடானில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் சர்வதே நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்ட போர் குற்றவாளிகளான சூடானைச் சேர்ந்த அஹமத் ஹருனும், முன்னாள் அதிபரான ஓமர் அல் பஷிரும் சூடான் சிறையிலிருந்து வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இவர்கள் இருவரும் கோபர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அந்தச் சிறை உடைக்கப்பட்டு இருவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றும், ராணுவத்தினரே இருவருக்கும் உதவியதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. இதுகுறித்து போர் குற்றவாளியான அஹமத் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறும்போது, “ நாங்கள் சிறையிலிருந்து வெளியேறிவிட்டோம். நாட்டில் மீண்டும் நீதித்துறை செயல்படும்போது நாங்கள் நேரில் ஆஜராக தயாராக உள்ளோம்.” என்று பேசியுள்ளார். சிறையில் இருந்து வெளியேறிய இருவர் மீது ஏராளமான கொலை குற்றச்சாட்டுகளும், மனித உரிமை மீறல் வழக்குகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து