முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணாமலை, முத்து உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் சரத்பாபு காலமானார்

திங்கட்கிழமை, 22 மே 2023      சினிமா
Sarath-Babu 2023-05-22

ஐதராபாத், 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் சரத்பாபு ஐதராபாத்தில் ஏ.ஐ.ஜி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சரத்பாபு  ஏ.ஐ.ஜி.மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலமானதாக குடும்பத்தினர் அறிவித்தனர்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், 'நிழல் நிஜமாகிறது', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தைக் கிள்ளாதே', 'முள்ளும் மலரும்', 'அண்ணாமலை', 'முத்து' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

நிழல் நிஜமாகிறது, சலங்கை ஒலி, 47 நாட்கள், மெட்டி, வேலைக்காரன், அண்ணாமலை, பகல்நிலவு, சிப்பிக்குள் முத்து, சங்கர் குரு, அன்று பெய்த மழையில் என்று தமிழின் பெருமைக்குரிய அத்தனை இயக்குனர்களின் படங்களிலும் சரத்பாபு நடித்து உள்ளார்.

சரத்பாபுவின் முதல் மனைவி தெலுங்கு நடிகை ரமா பிரபா. இவரை தமிழ் ரசிகர்களுக்கும் நன்றாகவே தெரிந்திருக்கும். 1970 களில் இயக்குனர் ஸ்ரீதர் இயக்கத்தில் 'சாந்தி நிலையம்' மெகா ஹிட் திரைப்படத்தில் நாகேசுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இவர்களது திருமணம் 1980 ல் நடந்தது. ஆனால் அந்தத் திருமணத்தின் ஆயுள் வெறும் 8 வருடங்களே! பிறகு இருவரும் விவாகரத்தாகி பிரிந்து விட்டனர். பிறகு சரத்பாபு நடிகர் நம்பியாரின் மகள் சினேகா நம்பியாரைத் திருமணம் செய்திருந்தார். அந்தத் திருமணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து