முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷிசுனக் இல்லத்தின் மீது மர்ம கார் மோதல்: ஒருவர் கைது

வெள்ளிக்கிழமை, 26 மே 2023      உலகம்
England 2023-05-26

Source: provided

லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் இல்லத்தின் முதலாவது கேட் பகுதியில் மர்ம கார் ஒன்று மோதிய சம்பவம் தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இங்கிலாந்து நாட்டு பிரதமராக இந்திய வம்சாவழியை சேர்ந்த ரிஷிசுனக் இருந்து வருகிறார். இவரது அதிகாரப்பூர்வ இல்லம் லண்டன் நகரில் எண் -10 டவுணிங் தெருவில் உள்ளது. இங்குள் ஒயிட் ஹவுஸ் என்ற பகுதியின் முதலாவது கேட்டில் பிரதமர் ரிஷிசுனக் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். 

சம்பவத்தன்று இந்த முதலாவது கேட் நுழைவு வாயிலில் மர்ம கார் ஒன்று மோதியது. இதைப் பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் காரை ஓட்டி வந்தது 50 வயது மதிக்கதக்கவர் என்பது தெரியவந்தது. இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஏதேச்சையாக நடந்த விபத்தா? அல்லது சதி வேலையா? என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தொண்டை வலி குணமாக | தொண்டைகரகரப்பு நீங்க | தொண்டை கட்டு | குரல் கம்மல் | தொண்டை எரிச்சல் 2 weeks 2 days ago மலச்சிக்கல் குணமாக | ஜீரண சக்தி உண்டாக | மலக்கட்டு நீங்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago சொறி, சிரங்கு, படை குணமாக | நரம்பு சிலந்தி | படர்தாமரை நீங்க | தோல் நோய் | குஷ்டம் குணமாக 2 months 1 week ago
காய்ச்சல் குணமாக | மலேரியா காய்ச்சல் | டைபாய்டு காய்ச்சல் குணமாக | பித்த ஜுரம் | சளி காய்ச்சல் குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago பேதி நிற்க | சீதபேதி குணமாக | உஷ்ண பேதி | கழிச்சல் | இரத்த கழிச்சல் குணமாக 2 months 1 week ago கல்லடைப்பு தீர | சிறுநீரக கோளாறு நீங்க | சிறுநீரக கல் கரைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து