முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏலியன்ஸ் 2042

திங்கட்கிழமை, 29 மே 2023      சினிமா
Aliens-2042 2023-05-29

Source: provided

Ren Tianye, Zhang Zhilu, Qu Niciren ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் படம் ஏலியன்ஸ் 2042. கதை, ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ள தண்ணீர் ஆதாரங்களை திருடும் நோக்கில் அனைத்து நகரங்கள் மீதும் மிகப்பெரிய தாக்குதல் நடத்துகிறார்கள். உலக நாடுகளின் ராணுவம் அனைத்தும் ஏலியன்களிடம் தோற்றுப் போக, சீன ராணுவம் மட்டும் கடைசி வரை போராடி வருகிறது. ஆனால், அவர்களிடம் இருக்கும் ஆயுதத்தால் ஏலியன்களை அழிக்க முடியாமல் போக அவர்களும் தோல்வியடைகிறார்கள். அதில் இருந்து தப்பிக்கும் ராணுவ வீரரான செங் லிங், தனது குடும்பத்தை பார்க்க சொந்த ஊருக்கு செல்ல முயற்சிக்கும் போது, ஏலியன்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் சிறு குழுவுடன் சேர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அவர்களுடன் சேர்ந்து செங் லிங் ஏலியன்களை அழித்தாரா? இல்லையா? என்பதை முழுக்க ஆக்‌ஷனாக சொல்லியிருக்கும் ஹாலிவுட் படம்தான் ஏலியன்ஸ் 2042. இப்படத்தின் ஒளிப்பதிவு, இசை மற்றும் ஒலி வடிவமைப்பு, படத்தொகுப்பு, கிராபிக்ஸ் என அனைத்தும் சர்வதேச தரமாக உள்ளது. சிறு பட்ஜெட்டில் புதிய வடிவத்தில் ஏலியன்களை பற்றிய படத்தை ரசிக்கும் வகையில் கொடுத்து திருப்திப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் Huang Zhuasheng.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து