முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்தது

புதன்கிழமை, 31 மே 2023      தமிழகம்
Stelin 2022 03 05

Source: provided

சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிங்கப்பூர், ஜப்பான் சுற்றுப்பயணத்தின் மூலம் தமிழக தொழில் முதலீட்டுக்கு 1,258 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டை வரும் 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் அடுத்த ஆண்டு ஜனவரியில் சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நடத்துகிறது. இதில் பங்கேற்குமாறு முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கவும் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 9 நாள் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.

கடந்த 23-ந் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டுச் சென்றிருந்த அவர் 2 நாட்கள் அங்கு தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். சிங்கப்பூரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலீட்டுக்கான நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்து பேசினார்.

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வாருங்கள். முதலீடு செய்ய உகந்த மாநிலம் தமிழ்நாடு. நீங்கள் தொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து கொடுக்கும் என்று கூறினார். வருகிற ஜனவரி மாதம் சென்னையில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. குறிப்பாக சிங்கப்பூரில் ஹ.பி. இண்டர்நேஷனல் நிறுவனம் ரூ.312 கோடியில் மின்னணு பாகங்கள் தயாரிப்புக்கான முதலீட்டில் கையெழுத்திட்டது. இதன் பிறகு சிங்கப்பூர் தொழில் துறை அமைச்சர் எஸ்.ஈஸ்வரன், சட்ட அமைச்சர் சண்முகம் ஆகியோரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து இரு தரப்பு வர்த்தக உறவு குறித்து பேசினார். சிங்கப்பூர் வாழ் தமிழர்களையும் சந்தித்தார். அங்கு நடைபெற்ற தமிழ்ச் சங்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

அதன் பிறகு சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு மே 25-ந்தேதி ஜப்பான் நாட்டுக்கு சென்றார். அங்குள்ள ஒசாகா நகருக்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பான 'ஜெட்ரோ' வுடன் இணைந்து நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். ஜப்பானின் டைசல் சேப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது. 27-ந்தேதி ஒசாகாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்குள்ள பிரபல கோட்டையையும் சுற்றிப் பார்த்தார்.

28-ந்தேதி புல்லட் ரெயிலில் ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றார். அங்கு தமிழ்ச் சங்கம் அளித்த வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். முதலீட்டாளர்கள் மாநாட்டிலும் கலந்து கொண்டார். 29-ந் தேதி ரூ.818.90 கோடி முதலீடு தொடர்பாக 6 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பானின் ஓமரான் ஹெல்த்கேர் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஜப்பான், சிங்கப்பூர் இரு நாடுகளிலும் மொத்தம் 13 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.1258.90 கோடி அளவுக்கு தமிழ்நாட்டுக்கு முதலீடு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து