முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விராட் கோலிபார்ம்:பாண்டிங் எச்சரிக்கை

வியாழக்கிழமை, 1 ஜூன் 2023      விளையாட்டு
1-Ram-58-1

Source: provided

இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற உள்ளது. அதற்கு இரு அணிகளும் ஆயத்தமாகி வருகின்றன. ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணியும், கம்மின்ஸ் தலைமையில் ஆஸ்திரேலிய அணியும் விளையாடுகின்றன. “இந்திய அணிக்கு எதிரான வியூகத்தில் கோலி குறித்து ஆஸ்திரேலிய அணியினர் நிச்சயம் பேசிக்கொண்டு இருப்பார்கள். அதில் சந்தேகமே இல்லை. அதே போல புஜாரா குறித்தும் நிச்சயம் பேசி வருவார்கள். அவர்கள் இருவரும் இந்தியா அணியின் முக்கிய வீரர்கள். 

கடந்த சில வாரங்களாக விராட் கோலி அபார ஃபார்மில் இருக்கிறார் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அது டி20 கிரிக்கெட் என்றாலும் அவரது ஃபார்ம், ஆஸி. அணிக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை. தனது சிறந்த ஃபார்மில் இருப்பதாக அவரே என்னிடம் தெரிவித்தார்” என பாண்டிங் தெரிவித்துள்ளார். புஜாரா, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,979 ரன்கள் குவித்துள்ளார். கோலியும், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 24 டெஸ்ட் போட்டிகளில் 1,979 ரன்கள் எடுத்துள்ளார். இளம் வீரர் சுப்மன் கில்லும், ஃபார்மில் இருப்பது இந்திய அணிக்கு பலமே.

________________

பி.எஸ்.ஜி. அணிக்காக கடைசி 

போட்டியில் விளையாடும் மெஸ்சி

கால்பந்து, அர்ஜென்டினா என்றாலே நினைவுக்கு வரும் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் மெஸ்சி. பார்சிலோனா அணிக்காக நீண்ட காலம் விளையாடிய அவர், திடீரென பி.எஸ்.ஜி. (paris saint-germain fc) அணிக்கு மாறினார். இந்த நிலையில் பிஎஸ்ஜி அணி நாளை (சனிக்கிழமை) கிளெர்மோன்ட் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இதுதான் மெஸ்சி பிஎஸ்ஜி அணிக்காக விளையாடும் கடைசி போட்டி என அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோபர் கால்டியர் தெரிவித்துள்ளார். பார்சிலோனா அணிக்காக மெஸ்சி 474 போட்டிகளில் விளையாடி 520 கோல்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பார்சிலோனா அணி நிர்வாகத்திடம், மீண்டும் பார்சிலோனாவில் விளையாட தங்களுக்கு விருப்பம் இருந்தால் 10 நாட்களுக்குள் தகவல் தெரிவிக்க வேண்டும் என மெஸ்சி தெரிவித்ததாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. மெஸ்சி மீண்டும் அணிக்கு திரும்புவதை பார்சிலோனா மகிழ்ச்சியுடன் எதிர்பார்க்கும் நிலையில், அவர்களின் நிதி அமைப்பு சிக்கலாக இருக்கும் எனத் தெரிகிறது.

________________

இலங்கைக்கு எதிரான ஒருநாள்:

ஆப்கான் வீரர் ரஷித் கான் விலகல்

ஐபிஎல் தொடர் முடிவடைந்து வெளிநாட்டு வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு திரும்பிய நிலையில், பல்வேறு சர்வதேச போட்டிகள் தொடங்கவுள்ளன. இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான் அணி இன்று முதல் ஒருநாள் தொடர்களில் பங்கேற்கவுள்ளன. மொத்தம் மூன்று ஒருநாள் தொடர்களில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ந்து வங்கதேசத்துக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளது.

இந்நிலையில், முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக ஆப்கானிஸ்தான் அணியின் முன்னணி பந்துவீச்சாளர் ரஷித் கான், முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலிருந்து விலகுவதாகவும், கடைசி ஒருநாள் போட்டியில் பங்கேற்பார் என்றும் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடிய ரஷித் கான், மொத்தம் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி டாப்-3 பவுலர்கள் பட்டியலில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.

________________

லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணனுக்கு 

தமிழக பா.ஜ.க.வில் புதிய பொறுப்பு

57 வயதான லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன், இந்திய கிரிக்கெட் அணிக்காக 9 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சர்வதேச அளவில் விளையாடி உள்ளார். வலது கை லெக் ஸ்பின்னரான இவர் மொத்தம் 41 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். கடைசியாக 1987-ல் விளையாடினார். கடந்த 23 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனையாளராக இயங்கி வருகிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் அவர் இணைந்தார். இந்தச் சூழலில் தமிழ்நாடு மாநில பாஜக விளையாட்டு பிரிவின் கவுரவ தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை மாநில பாஜக விளையாட்டுப் பிரிவின் தலைவர் அமர் பிரசாத் ரெட்டி வெளியிட்டுள்ளார்.

________________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து