முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி : கோபால கிருஷ்ண காந்தி புகழாரம்

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
CM-3 2023-06-02

Source: provided

சென்னை : நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி என்று மகாத்மா காந்தியின் பேரனும், மேற்கு வங்க மாநில முன்னால் கவர்னருமான கோபால கிருஷ்ண காந்தி தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி நேற்று நூற்றாண்டு லட்சினை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. சென்னை, கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பங்கேற்றார்.

பின்னர், மேற்குவங்க மாநில ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி கருணாநிதியின் நூற்றாண்டு லட்சினையை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:- அரசியல் மற்றும் பொது வாழ்வில் பக்குவமானவர் கருணாநிதி. எம்.ஜி.ஆர் உடல் நலம் தேறி பொது வாழ்வுக்கு திரும்ப வேண்டுகிறேன் என கருணாநிதி எழுதினார். நிர்வாகத்தை கையாளுவதில் கைதேர்ந்தவர் கருணாநிதி. நான் கோவிலுக்கு அடிக்கடி செல்வதில்லை. கருணாநிதி சன்னதியில் உண்மையை பேச வேண்டும். தற்போது, இந்தியாவில் அரசியல் சூழ்நிலை சரியில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து