எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : ரயில் விபத்துகளை தடுக்க உதவக் கூடிய ‘கவாச்’ தொழில்நுட்பம் இருந்திருந்தால் ஒடிஷாவில் நிகழ்ந்த ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாம் என்று பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஒடிசா ரயில்கள் விபத்தில் 250-க்கும் மேற்பட்ட உயிர்கள் பறிபோயுள்ளன. 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். கடந்த 30 ஆண்டுகளில் நடந்த 3 மிக மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக ஒடிசா ரயில் விபத்து இணைந்துள்ளது. இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த தேசத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொள்ளாமல் தடுக்கும் ‘கவாச்’ (Kavach) என்ற தொழில்நுட்பம் விபத்து நடந்த பகுதியில் இல்லை என்ற தகவலை ரயில்வே செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதுதான் தற்போது விவாதப் பொருளாகியுள்ளது.
கவாச் தொழில்நுட்பம் என்றால் என்ன?
கடந்த 2022-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி ரயில்வே அமைச்சகம் ரயில்கள் பாதுகாப்புக்காக முழுக்க முழுக்க இந்தியாவில் உருவாக்கப்பட்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு அமைப்பான 'கவாச்'-ஐ அறிவித்தது. இதற்காக மத்திய அரசின் ரிசேர்ச் டிசைன்ஸ் அண்ட் ஸ்டாண்டர்ட்ஸ் ஆர்கனைசேஷனிற்கு மூன்று இந்திய நிறுவனங்கள் இதனை உருவாக்கிக் கொடுக்க, இந்திய ரயில்வே அதனை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தது. கவாச் என்ற சொல் கவசம் - பாதுகாப்பு என்பதைக் குறிப்பதாகும்.
கவாச் எப்படி செயல்படும்?
கவாச் தொழில்நுட்பமானது லோக்கோ பைலட்டுகள் என்றழைக்கப்படும் ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். எஸ்பிஏடி, சிக்னல் பாஸிங் அட் டேஞ்சர் எனப்படும் இந்த சமிக்ஞையானது ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். மிகுந்த அடர்த்தியான பனி மூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் அலர்ட் செய்யும். எச்சரிக்கை செய்வதோடு மட்டுமல்லாமல், இது தானாகவே பிரேக் அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.
ஒடிசா ரயில் விபத்தை தவிர்த்திருக்கலாமா?
இந்நிலையில் கவாச் தொழில்நுட்பம் இல்லாததால் தான் ஒடிசா ரயில் விபத்து நடந்ததாக எதிர்க்கட்சிகள் பலவும் குற்றஞ்சாட்டி வருகின்றன. விபத்துக்குள்ளான மூன்று ரயில்களில் எதிலும் கவாச் தொழில்நுட்பம் இல்லை என்று சொல்லப்படுவதால் அது பற்றிய விவாதங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில், கவாச் இருந்திருந்தால் இத்தகைய மிகப் பெரிய விபத்தை தவிர்த்திருக்கலாமா என்பது ஊகங்களின் வசமே விடக்கூடியதாக உள்ளது என்று தொழில்நுட்ப வல்லுநர்களே கூறுகின்றனர். காரணம், ஒடிசா விபத்து இந்திய ரயில் விபத்து வரலாற்றிலேயே மிகவும் சிக்கலானது.
ஒரு ரயில் தவறான பாதையில் மாறிச் சென்று நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது மோதுகிறது. அந்த சரக்கு ரயிலின் பெட்டிகள் தடம்புரண்டு வேறொரு தண்டவாளத்தில் வந்த மற்றொரு எக்ஸ்பிரஸ் ரயிலின் மீது மோதுகிறது. அந்த ரயிலின் பெட்டிகளும் தடம் புரள்கின்றன. இப்படி மூன்று ரயில்கள் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், கவாச் இதில் எந்த அளவுக்கு உதவியிருக்கும் என்பது இதுபோன்ற விபத்துகளை அது தடுத்திருந்த முந்தைய சான்றுகள் இருந்தால் மட்டுமே உறுதிப்படுத்த முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். இருந்தாலும், இதுபோன்ற தொழில்நுட்பங்களை சுணக்கமின்றி செயல்படுத்த பரிந்துரைக்கின்றனர். எதிர்காலத்தில் பாதுகாப்பை உறுதி செய்யவும், விபத்துப் பேரிடரில் பாடம் கற்கவும் உதவும் என்பதால்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-10-2025.
21 Oct 2025 -
தங்கம் விலை சற்று சரிவு
21 Oct 2025சென்னை, தங்கம் விலை நேற்று மாலை (அக். 21) சவரனுக்கு ரூ.1,440 குறைந்து விற்பனையானது. காலையில் அதிரடியாக சவரனுக்கு ரூ.
-
சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் நிறைவு: விரைவில் பீகார் தேர்தல் பிரச்சார களத்தில் பிரதமர் மோடி, ராகுல்..!
21 Oct 2025பாட்னா, சட்டசபை தேர்தலுக்கான மனுதாக்கல் முடிந்த நிலையில் விரைவில் பீகார் தேர்தல் பிரச்சார களத்தை பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் முற்றுகையிடவுள்ளனர்.
-
வட தமிழகத்தை நோக்கி நகர்கிறது புயல் சின்னம் : 15 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை
21 Oct 2025சென்னை, வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக தீவிரமாகும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், புயல் சின்னம் வட தமிழகத்தை நோக்கி நகர்வதாக தெரிவ
-
நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
21 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் நெல் கொள்முதல் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ளுங்கள் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளா
-
போர்க்கால அடிப்படையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: தமிழக அரசுக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
21 Oct 2025சென்னை, போர்க்கால அடிப்படையில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து 8 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
21 Oct 2025சென்னை, தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை உள்ளிட்ட 8 மாவட்ட கலெக்டர்களுடன் காணொலிக் காட்சி வாயிலாக முதல்
-
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து உயர்வு
21 Oct 2025தர்மபுரி : ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 24 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
-
வைகை அணையில் உபரி நீர் வெளியேற்றம்: 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை : ஆற்றுக்குள் இறங்க, குளிக்க தடை
21 Oct 2025ஆண்டிபட்டி : வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்ததால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தல்
21 Oct 2025புதுடெல்லி, நமது ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிப்போம் என நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
-
விருதுநகரில் மழையால் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதி : அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
21 Oct 2025விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் தொடர் மழையால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணம் அரசு சார்பில் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ந
-
கேரளாவில் 10 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
21 Oct 2025புதுடெல்லி : வட கிழக்குப் பருவமழை அடுத்த 24 மணி நேரத்தில் கேரளாவில் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக கணித்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம் பாலக்காடு, கோழிக்கோடு உள்பட 10 மாவட்டங
-
காவலர் வீரவணக்க நாள்: முதல் முறையாக காவலர் நினைவுச் சின்னத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
21 Oct 2025சென்னை, காவலர் வீரவணக்க நாளையொட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் காவலர் நினைவு சின்னம் முன்பாக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
-
நடப்பு ஆண்டில் 7-வது முறையாக நிரம்பியது: மேட்டூர் அணையில் இருந்து 34 அயிரம் கன அடி நீர் திறப்பு
21 Oct 2025மேட்டூர் : காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதையடுத்து, நடப்பாண்டில் மேட்டூர் அணை 7-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
மழை வெள்ள முன்னேற்பாடு பணிகள்: சென்னையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு
21 Oct 2025சென்னை : சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டு பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
-
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவோம்: நாட்டு மக்களுக்கு பிரதமர் கடிதம்
21 Oct 2025புதுடெல்லி, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.
-
பரூக் அப்துல்லா பிறந்தநாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
21 Oct 2025சென்னை : காஷ்மீரின் உரிமைகளுக்காக போராடி வரும் பரூக் அப்துல்லா பிறந்த நாள் வாழ்த்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறப்பு
21 Oct 2025சென்னை, செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதையடுத்து வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட்டம்: டெல்லியில் 15 மடங்கு அதிகரித்த காற்று மாசு
21 Oct 2025புதுடெல்லி : டெல்லியில் இந்த ஆண்டு பட்டாசு வெடிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததை அடுத்து மக்கள் 'பட்டாசு தீபாவளி'யை கொண்டாடியதன் எதிரொலியாக, உலக சுகாதார நிறுவனம் நிர்