எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களில் 250 பேர் இன்று காலை சென்னை வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 பேரின் எண்களை தொடர்பு கொண்டு தகவல் சேரித்துள்ளோம்" என்று ரயில்வே எஸ்.பி பொன்ராம் தெரிவித்தார்.
ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி பொன்ராம் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை சார்பில் ஒரு டிஎஸ்பி, ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் ஒரு டிஎஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் 24 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை 4 பேர் தங்களின் உறவினர்கள் தொடர்பான தகவலைக் கேட்டுள்ளனர். அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 200 காவல்துறையினர் மற்றும் 20 கமாண்டோக்கள் கொண்ட ஒரு படையினர் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்.
விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களில் 250 பேர் இன்று காலை சென்னை வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 பேரின் எண்களை தொடர்பு கொண்டு தகவல் சேரித்துள்ளோம்.
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் 800-க்கும் மேற்பட்டவர்கள் முன் பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த ரயில்களில் முன்பு பதிவு செய்யாத பெட்டிகள் தான் எப்போதும் அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கும். 5 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இருக்கலாம். இதில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது" என்று கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |