முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட பொதுமக்களுக்கு வரும் 23-ம் தேத முதல் அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 21 டிசம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-12-21

நெல்லை, பொருநை அருங்காட்சியகத்தை டிச.23 முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லை சீமைக்கும், பொருநை நாகரிகத்துக்கும் புகழ் சேர்க்கும் வகையில் ரூ.67.25 கோடியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டி மலைப் பகுதியில் 13 ஏக்கர் பரப்பில் 54,296 சதுர அடியில் பொருநை அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை இரவு மின்னொளியில் மிளிர்ந்த பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதைத்தொடர்ந்து அருங்காட்சியகத்தின் வாயிலில் வன்னி மரத்தை நடவு செய்தாா். அதன்பிறகு அருங்காட்சியகத்தின் அறிமுக கூடத்தை முதல்வர் திறந்து வைத்து பாா்வையிட்டார். அப்போது அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருள்கள் குறித்து முதல்வருக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கினார். பின்னர் கட்டடத்தின் மேல் மாடிக்கு சென்று அவர் பாா்வையிட்டார்.

இது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் இரா சுகுமாா் கூறுகையில் ‘பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிடுவதற்கு செவ்வாய்க்கிழமை (டிச.23) முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள். இதையொட்டி, பொதுமக்கள் சென்று வர வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்படும்’ என்றார். இந்த நிலையில், பொருநை அருங்காட்சியகத்தை செவ்வாய்கிழமை முதல் பொதுமக்கள் பாா்வையிடலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து