முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஆவணி மூலத் திருவிழா தொடங்கியது : 27-ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை நடக்கிறது

ஞாயிற்றுக்கிழமை, 13 ஆகஸ்ட் 2023      ஆன்மிகம்
Meenashi 2023 08 13

Source: provided

மதுரை : மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் சித்திரை பெருவிழா, ஆடி முளைக்கொட்டு விழா, ஆவணி மூலத்திருவிழா, ஐப்பசி நவராத்திரி விழா போன்றவை சிறப்பு வாய்ந்தவை. மேலும் சித்திரை திருவிழாவில் மீனாட்சிக்கும், ஆவணி திருவிழாவில் சுவாமிக்கும் பட்டாபிஷேக விழா நடைபெறும். அதிலும் சிவபெருமான் நடத்திய 64 திருவிளையாடல்களில் 12 திருவிளையாடல் லீலைகள் ஆவணி மூலத்திருவிழாவில் நடைபெறுவது சிறப்பு அம்சமாகும்.  

இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஆவணி மூலத்திருவிழா நேற்று சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இந்த திருவிழா நேற்று தொடங்கி வரும் 30-ம் தேதி வரை நடக்கிறது.  முக்கிய விழாக்கள் 19-ம் தேதியில் இருந்து தொடங்குகிறது. அதில் 19-ம் தேதி கருங்குருவிக்கு உபதேசம், 20-ம் தேதி நாரைக்கு முக்தி கொடுத்தல், 21-ம் தேதி மாணிக்கம் விற்ற லீலை, 22-ம் தேதி தருமிக்கு பொற்கிழி அளித்தல், 23-ம் தேதி உலவாக்கோட்டை அருளியது, 24-ம் தேதி பாணனுக்கு அங்கம் வெட்டுதல், இரவு திருஞான சம்பந்தர் சைவ சமய ஸ்தாபித வரலாறு லீலை போன்றவை நடைபெறுகிறது.  

25-ம் தேதி காலை சுவாமி வளையல் விற்ற லீலையும், இரவு 7.35 மணிக்கு மேல் சுந்தரேசுவரர் சுவாமி பட்டாபிஷேக நிகழ்ச்சியும் நடக்கிறது. 26-ம் தேதி நரியை பரியாக்கிய லீலையும், 27-ம் தேதி பிட்டுக்கு மண் சுமந்த லீலை திருவிழாவும், 28-ம் தேதி விறகு விற்ற லீலையும் நடக்க உள்ளது. 29-ம் தேதி சட்டத்தேர் வீதி உலாவும், இரவு சப்தாவரணத்தில் சுவாமியும் அம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். 

30-ம் தேதி தீர்த்தவாரியுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து