முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நிபந்தனைகளை கடைபிடிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2023      தமிழகம்
MDU-High-Court 2023-02-16

Source: provided

சென்னை : விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழாவும் ஒன்றாகும். விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 18-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்படும். பின்னர் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

இந்த நிலையில் , விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் காவல்துறை விதிக்கும் நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனியில் பல்வேறு அமைப்புகளால் வைக்கப்படும் விநாயகர் சிலைகளை ஒரே நாளில் கரைக்க உத்தரவிடக் கோரிய வழக்கில் ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும்,  சட்டம் ஒழுங்கு ஏற்படாத வகையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தி கொள்ளலாம் எனவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 2 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து