முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதியில் பிரம்மோற்சவ விழா செப்.18-ல் தொடக்கம்

வெள்ளிக்கிழமை, 15 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Tirupati 2023 03 30

Source: provided

திருப்பதி : திருப்பதி எழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா வருகிற 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

திருப்பதி மலையில் ஏழுமலையான் அடி வைத்த நாளில் அவர் பிரம்மதேவனை அழைத்து உலக நன்மைக்காக தனக்கு விசேஷமான உற்சவங்களை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். அதை மகிழ்ச்சியுடன் ஏற்று பிரம்மதேவர் புரட்டாசி மாதத்தில் திருவோண நட்சத்திரம் அன்று நிறைவுபெறும் விதமாக 9 நாட்கள் உற்சவத்தை நடத்தினார். பிரம்ம தேவர் நடத்திய உற்சவம் என்பதால் திருப்பதியில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழா பிரமோற்சவம் என்று அழைக்கப்பட்டு வருவதாக புராணங்கள் கூறுகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வருடாந்திர பிரம்மோற்சவ விழா வருகிற 18-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 22-ம் தேதி கருட சேவை 23-ம் தேதி தங்க தேரோட்டம் 25-ம் தேதி திருத்தேர் 26-ம் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து வருகின்றனர்.

பிரமோற்சவ நாட்களில் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையிலும், வாகன சேவைகள் நடைபெற உள்ளன. அப்போது 9 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரமோற்சவத்தின் முதல் நாள் மாநில அரசின் சார்பில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பங்கேற்று பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்க உள்ளார். கருட சேவை அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிவார்கள். அப்போது பக்தர்கள் நெரிசல் இன்றி எளிதில் தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

கருட சேவையின் போது நான்கு மாட வீதிகளில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளில் 2 லட்சம் பக்தர்களை அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். பக்தர்கள் வந்து செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட உள்ளது. மாடவீதிக்கு வெளியே காத்திருக்கும் பக்தர்களை வரிசையில் அனுமதித்து கருட சேவையில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

கருட சேவையின் போது 2 அல்லது 3 மணி நேரம் வரை பொறுமையாக காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படும். அதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென அதிகாரிகள் வேண்டுகோள் எடுத்துள்ளனர். திருப்பதி பிரமோற்சவ விழாவையொட்டி ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தில் சென்னை, வேலூர் ஆகிய இடங்களுக்கு கூடுதலாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 weeks 1 day ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 2 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து