எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மும்பை : உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் கிரிக்கெட் வீரர்கள் பலர் தங்களது சாதனைகளை வெளிப்படுத்தியிருக்கின்றனர். பல முறை தங்களது அணிகளுக்காக வெற்றியையும் தேடித் தந்திருக்கிறார்கள். உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்து முதல் 10 இடங்களில் இருப்பவர்களை பின்வருமாறு காணலாம்.
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா)
உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். 45 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 2,278 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.95 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 88.98 ஆகும். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 6 சதங்கள் மற்றும் 15 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 152. உலகக் கோப்பை போட்டிகளில் அதிகம் சதம் அடித்தவரும் இவரே. கடந்த 1996 மற்றும் 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடர்களில் அதிகபட்சமாக முறையே 523 ரன்கள் மற்றும் 673 ரன்கள் குவித்தார். கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் அடித்த 673 ரன்களே தனி நபர் ஒருவரால் ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிகபட்சமாக அடிக்கப்பட்ட ஸ்கோர் ஆகும்.
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா)
உலகக் கோப்பை தொடரில் 46 போட்டிகளில் விளையாடியுள்ள ரிக்கி பாண்டிங் 1,743 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.86 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 79-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 5 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 140*. இதனை அவர் இந்தியாவுக்கு எதிரான 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் எடுத்தார்.
குமார் சங்ககாரா (இலங்கை)
உலகக் கோப்பை தொடரில் 37 போட்டிகளில் விளையாடியுள்ள சங்ககாரா 1,532 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 56.74 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86.55 ஆகும். அவர் 5 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124.
பிரையன் லாரா (மே.இ.தீவுகள்)
பிரையன் லாரா உலகக் கோப்பை தொடரில் 34 போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் 1,225 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 42.24 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 86-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 116.
ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாப்பிரிக்கா)
கடந்த 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில் உலகக் கோப்பை போட்டிகளில் அறிமுகமானார் டி வில்லியர்ஸ். அடுத்த மூன்று உலகக் கோப்பை தொடர்களிலும் தனது சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தினார். 23 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,207 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 63.52 ஆக உள்ளது. அவரது ஸ்டிரைக் ரேட் 117-க்கும் அதிகமாக உள்ளது. அவரது சிறந்த ஸ்கோர் 162*. அவர் 4 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
கிறிஸ் கெயில் (மே.இ.தீவுகள்)
ஆடுகளத்தில் களமிறங்கினால் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைப்பவர் கிறிஸ் கெயில். உலகக் கோப்பையில் 35 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,186 குவித்துள்ளார். அவரது சராசரி 35.93 ஆகும். ஸ்டிரைக் ரேட் 90.53 ஆக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 215. இதுவே உலகக் கோப்பை தொடரின் முதல் இரட்டை சதமாகும்.
சனத் ஜெயசூர்யா (இலங்கை)
உலகக் கோப்பையில் 38 போட்டிகளில் விளையாடியுள்ள சனத் ஜெயசூர்யா 1,165 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 34.26 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 90.66 ஆக உள்ளது. அவர் 3 சதங்கள் மற்றும் 6 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 120.
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா)
உலகக் கோப்பையில் 36 போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ் 1,148 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.92 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 74.40 ஆகும். அவர் ஒரு சதம் மற்றும் 9 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 128*.
ஷகிப் அல் ஹசன் (வங்கதேசம்)
உலகக் கோப்பை வரலாற்றில் வங்கதேசம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் சிறப்பாக செயல்பட்டுள்ளார். 29 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1,146 ரன்கள் குவித்துள்ளார். அவரது சராசரி 45.84 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 82-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 2 சதங்கள் மற்றும் 10 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 124*. அவர் 2 சதங்கள் மற்றும் 5 அரைசதங்கள் எடுத்துள்ளார்.
திலகரத்னே தில்ஷன் (இலங்கை)
உலகக் கோப்பை தொடரில் 27 போட்டிகளில் விளையாடியுள்ள தில்ஷன் 1,112 ரன்கள் எடுத்துள்ளார். அவரது சராசரி 52.95 ஆக உள்ளது. ஸ்டிரைக் ரேட் 92-க்கும் அதிகமாக உள்ளது. அவர் 4 சதங்கள் மற்றும் 4 அரைசதங்கள் எடுத்துள்ளார். அவரது சிறந்த ஸ்கோர் 161*. 2011 ஆண்டு உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரராக தில்ஷன் உள்ளார். அவர் 2011 உலகக் கோப்பை தொடரில் 9 போட்டிகளில் 500 ரன்கள் எடுத்தார். அதில் 2 சதங்கள் மற்றும் 2 அரைசதங்கள் அடங்கும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 14 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-09-2025.
20 Sep 2025 -
இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை: அமெரிக்கா செல்கிறார் பியூஷ் கோயல்
20 Sep 2025புதுடெல்லி, இந்திய - அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்லும் நோக்கில் அடுத்த சில நாட்களில் இந்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அமெரிக்கா செல்ல
-
தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை..?
20 Sep 2025டெல்லி, தேர்தல் ஆணையம் ரத்து செய்த 42 தமிழக கட்சிகள் எவை என்ற விவரம் வெளியாகியுள்ளது.
-
தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி உதவி
20 Sep 2025சென்னை, தமிழக வில்வித்தை வீராங்கனைக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிதி உதவி வழங்கினார்.
-
மும்பையில் இருந்து சென்ற தாய்லாந்து சென்ற விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025சென்னை, தாய்லாந்துக்கு சென்று கொண்டு இருந்த விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
-
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா 23-ம் தேதி தொடக்கம்
20 Sep 2025திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 23-ம் தேதி தொடங்குகிறது.
-
ஆதார் கார்டில் திருத்தம் செய்ய கட்டணம் மேலும் அதிகரிப்பு..?
20 Sep 2025சென்னை, ஆதார் கார்டில் திருத்தம் செய்வதற்கான கட்டணம் உயர்வு குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
-
எழுதி கொடுத்ததை விஜய் படிக்கிறார்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விமர்சனம்
20 Sep 2025சென்னை, விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். அதில் அவர் எழுதி கொடுத்ததை படிக்கிறார் என்று விமர்சனம் செய்துள்ளார்.
-
பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு மீண்டும் ஒப்படைக்க சென்னை மெட்ரோ அலுவலகம் திறப்பு
20 Sep 2025சென்னை, பயணிகள் தவறவிட்ட பொருட்களை மீட்டு பொருட்களை மீண்டும் ஒப்படைக்க சென்னையில் மெட்ரோ அலுவலகம் திறக்கப்பட்டது.
-
இந்திய ராணுவத்தில் பள்ளி மாணவர்கள் சேர வேண்டும்: முப்படை தலைமை தளபதி அழைப்பு
20 Sep 2025ராஞ்சி, பள்ளி மாணவர்கள் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் அழைப்பு விடுத்துள்ளார்.
-
மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
20 Sep 2025மும்பை, மும்பையில் மோனோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
20 Sep 2025புதுடெல்லி, டெல்லியில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிப்பு
20 Sep 2025சென்னை, சென்னையில் மெட்ரோ ரெயில் க்யூஆர் டிக்கெட் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
-
நைஜீரியாவில் தீ விபத்து: 10 பேர் பலி
20 Sep 2025அபுஜா, நைஜீரியாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
கரடி நடமாட்டம் எதிரொலி: பழைய குற்றாலத்தில் குளிப்பதற்கான நேரம் குறைப்பு
20 Sep 2025தென்காசி, கரடி நடமாட்டம் அதிகரிப்பால் பழைய குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
-
மாணவர்களின் விவரங்களை வரும் 20-ம் தேதிக்குள் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, மாணவர்களின் விவரங்களை விரைவில் எமிஸ் தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
-
மைசூரில் தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளருக்கு எதிரான மனு தள்ளுபடி
20 Sep 2025புதுடெல்லி, மைசூரு தசராவை தொடங்கி வைக்க எழுத்தாளர் பானு முஷ்டாக் அழைக்கப்பட்டதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
-
அமெரிக்கா எச்.1 பி விசா விவகாரம்: பிரதமர் மோடி மீது ராகுல் விமர்சனம்
20 Sep 2025புதுடெல்லி, எச்.1 பி விசா விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.
-
ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டம்
20 Sep 2025வாஷிங்டன், ஆப்கானிஸ்தானில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.
-
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்: மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்
20 Sep 2025புதுடெல்லி, மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்துக்கு மாறுவதற்கான இறுதி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கு நுழைவுநிலை பயிற்சி தொடக்கம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்
20 Sep 2025சென்னை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 2,715 பட்டதாரி ஆசிரியர்களுக்கான நுழைவு நிலைப் பயிற்சியை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேற்று (செப். 20) தொடக்கி வைத்தார்.
-
பள்ளிகளில் சாதி உணர்வு, பாலின பாகுபாடு போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாத வகையில் மாணவர்களை பாதுகாக்க வேண்டும்: சென்னையில் நடைபெற்ற மும்பெரும் விழாவில் ஆசிரியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
20 Sep 2025சென்னை, எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
காசாவில் தீவிரமடையும் போர்: இஸ்ரேலுக்கு மேலும் ஆயுதங்களை வழங்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்..!
20 Sep 2025வாஷிங்டன், காசாவில் தீவிரமடையும் போரை தொடர்ந்து இஸ்ரேலுக்கு கோடிக்கணக்கான மதிப்பிலான ஆயுதங்களை ட்ரம்ப் நிர்வாகம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.
-
சாலை விபத்தில் ஆசிரியை பலி: குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
20 Sep 2025விழுப்புரம், விழுப்புரத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.