முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை

ஞாயிற்றுக்கிழமை, 17 செப்டம்பர் 2023      இந்தியா
Metro-train 2023 05 02

Source: provided

கொல்கத்தா : இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தொடங்க உள்ளது. 

இதற்காக கொல்கத்தா மாநிலத்தில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள இந்த மெட்ரோ சுரங்கப் பாதைகள், லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான யூரோஸ்டார் ரெயில்கள் சேனல் சுரங்கப்பாதை வழியாகச் செல்வதைப் போலவே கட்டப்பட்டுள்ளன. 

நகரத்தின் கிழக்கு - மேற்கு பகுதியை இணைக்கும் இந்த வழித்தடம் மொத்தம் 16 கி.மீ தூரம் கொண்டது. இந்தப் பாதை தண்ணீருக்கு அடியில் மட்டும் 4.8 கி.மீ சென்று, எஸ்ப்ளனடே பகுதியை ஹவுரா மைதானத்தோடு இணைக்கிறது. 

இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்த பிறகு ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இந்தப் பாதையில் செல்லும். இந்த சுரங்கப் பாதையில் வெற்றிகரமாக மெட்ரோ ரெயில் சோதனை நடத்தப்பட்டது. அடுத்த மாத இறுதியில் எஸ்ப்ளனடே ஹவுரா மைதான் இடையேயான வழித்தடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்வார். 

அதன் பிறகே இந்தப் பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கும். ரெயில் தண்டவாளங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதால் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை அவசியமாகும். எப்படியும் டிசம்பர் மாத இறுதிக்குள் மெட்ரோ சேவை தொடங்கி விடும் என கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸா தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து