எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : பாராளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) பழைய கட்டிடத்தில் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று புதிய பாராளுமன்ற வளாகத்தில் துணை ஜனாதிபதி ஜகதீப் தங்கர் தேசியக்கொடியை ஏற்றி வைத்தார்.
கடந்த மே மாதம் 28-ம் தேதி திறக்கப்பட்ட புதிய கட்டிடத்தில் தேசிய கொடி ஏற்றப்படவில்லை என்பதால் நேற்று கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய அமைச்சர்கள் பிரகலாத் ஜோஷி, முரளீதரன், பியூஷ் கோயல், அர்ஜூன் ராம்மேக்வால், காங்கிரஸ் எம்.பி.க்கள் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பிரமோத் திவாரி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில் பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல்நாள் நிகழ்வுகள் வழக்கம்போல பழைய கட்டிடத்திலேயே நடைபெற உள்ளன. அடுத்த நாள் முதல் 22-ம் தேதி வரை புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
பாராளுமன்ற சிறப்புக்கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் அறிவிக்கப்படாததற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, பாராளுமன்ற செய்தி இதழில் இதுகுறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
அரசியல் நிர்ணய சபை தொடங்கப்பட்டது முதல் பாராளுமன்றத்தின் 75 ஆண்டுகால பயணம் வரை இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான மசோதாவை மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது. இந்த மசோதா மக்களவையில் விவாதிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதவிர, வழக்கறிஞர்கள் (திருத்த) மசோதா, அஞ்சல் அலுவல் மசோதா உள்ளிட்ட மசோதாக்கள் மக்களவை நிகழ்ச்சி நிரலில் இடம்பெற்றுள்ளன. மேலும், பாராளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவும் இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
சிறப்புக் கூட்டத்தொடரில் பா.ஜ.க. உறுப்பினர்கள் அனைவரும் தவறாது பங்கேற்குமாறு அக்கட்சி கொறடா உத்தரவிட்டு உள்ளார். இதனிடையே சிறப்புக் கூட்டத்தொடரை முன்னிட்டு, மத்திய அரசு நேற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து இருந்தது. இதில், கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பை மத்திய அரசு கோரியது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இதனால், அதுபற்றி இந்த சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதேபோல் சந்திரயான் 3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது, ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தது பற்றியும் ஆலோ சிக்கப்படும் என கூறப்படுகிறது.
புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு செல்லும் போது, பாராளுமன்ற ஊழியர்கள் புதிய சீருடை அணிந்து செல்வார்கள். இவற்றை நிப்ட் எனப்படும் பாட்னா தேசிய பேஷன் தொழில்நுட்ப மையம் தயாரித்துள்ளது.
பாராளுமன்றத்தில் பணியாற்றும் அதிகாரிகளின் சீருடை இனி அடர் இளஞ்சிவப்பு நிறத்திலான அல்லது மஜெண்டா நிறத்திலான நேரு ஜாக்கெட் மாடலில் இருக்கும். இவற்றில் தாமரைப் பூக்கள் அச்சாகி இருக்கும். பேண்ட் காக்கி நிறத்திலேயே இருக்கும்.
அதே போல் பாராளுமன்றத்தின் இரு அவைகளின் காவலர்களின் உடைகளும் மாற்றப்படுகின்றன. அவர்கள் மணிப்பூரி தலைப்பாகை அணிந்திருப்பார்கள். பாராளுமன்ற வளாகப் பாதுகாவலர்களின் சீருடையும் மாற்றப்படுகிறது. சபாரி உடைக்குப் பதிலாக அவர்களுக்கு ராணுவத்தினர் அணியும் உருமறைப்பு உடைகள் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாராளுமன்ற புதிய கட்டிடத்தின் வடிவமைப்பு, நிறம் ஆகியனவற்றையும் இந்த சீருடைகள் பிரதிபலிக்கும். அனைத்து சீருடைகளிலும் செல்போனை வைத்துக் கொள்வதற்காகவே பிரத்யேக பாக்கெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளது: அமைச்சர் துரைமுருகன்
16 Mar 2026சென்னை, வரும் சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வெற்றி பிரகாசமாக உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத்தேர்தல் அதிகாரி ஆலோசனை
16 Mar 2026சென்னை, தமிழக பேரவைத் தேர்தலையொட்டி அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நேற்று (மார்ச் 16) ஆலோசனை மேற்கொண்டார்.
-
பா.ஜ.க.வுடன் செல்பவர்கள் யாராக இருந்தாலும் தோல்வி நிச்சயம்: டி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து
16 Mar 2026சென்னை, பா.ஜ.க.வுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்ததால்தான் 2001-இல் தி.மு.க. தோற்றது.
-
காவல்துறையினரை தாக்கி தப்பிக்க முயற்சி: சென்னை மாதவரத்தில் ரவுடி என்கவுண்டர் சுட்டுக்கொலை
16 Mar 2026சென்னை, சென்னை மாதவரத்தில் ரவுடி தொப்பை கணேஷ் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
-
6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனா-வடகொரியா இடையே விமான சேவை தொடக்கம்
16 Mar 2026பெய்ஜிங், சீனா- வடகொரியா இடையேயான விமானப் போக்குவரத்து கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டில் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
-
மகளிா் ஆதரவு இருக்கும் வரை, தி.மு.க. அரசை எவராலும் வீழ்த்த முடியாது: முதல்வர்
16 Mar 2026சென்னை, பெண்கள் நம்முடன் இருக்கும்போது, நம்மை யாராலும் வீழ்த்த முடியாது.
-
வாக்குகளை எண்ண கூடுதல் இடைவெளி: தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
16 Mar 2026புதுடெல்லி, வாக்கு எண்ணிக்கைக்கு கூடுதல் இடைவெளி உள்ளதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்ததை அடுத்து இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகைகளால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19, 20-ம் தேதிகளில் விடுமுறை
16 Mar 2026டெல்லி, நவராத்திரி, ரம்ஜான், குடீ பாடவா ஆகிய பண்டிகைகள் வருவதால் பாராளுமன்ற மாநிலங்களவைக்கு வரும் 19,20ம் தேதிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் 5 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனை மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
16 Mar 2026மதுரை, தூத்துக்குடி, விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வகையில் சந்தேகத்துக்கு இடமான 5 பேரிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு டி.என்.ஏ பரிசோதன
-
அடுத்த ஒரு மாதத்திற்கு தி.முக.வினர் ஓய்வின்றி தோ்தல் பணியாற்றுங்கள்: கட்சியினருக்கு துணை முதல்வர் உதயநிதி அறிவுரை
16 Mar 2026சென்னை, அடுத்த ஒரு மாதம் தி.மு.க.வினா் ஓய்வின்றி தோ்தல் பணியாற்ற வேண்டும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.
-
மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு
16 Mar 2026சென்னை, மத்திய, மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகளுக்கு தேர்தல் ஆணையம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது.
-
ஈரானில் இருந்து மீட்கப்பட்ட 550 இந்தியர்கள் ஆர்மீனியாவுக்கு ஜெய்சங்கர் நன்றி
16 Mar 2026புதுடெல்லி, ஈரானில் இருந்து அர்மீனியா வழியாக 550க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
-
எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாடமி விருது அறிவிப்பு
16 Mar 2026சென்னை, 2025-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தமிழ் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள்: விளம்பரங்கள், போஸ்டர்களை அகற்றும் அடிக்கும் பணி தீவிரம்
16 Mar 2026சென்னை, சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில், தமிழகம் முழுவதும் விளம்பரங்கள் மீது பெயிண்ட் அடித்து மறைக்கும் பணிகளும் போஸ்டர்கள் அகற்றும் பணிகளும
-
மேற்குவங்க மாநிலத்திற்கு புதிய தலைமைச்செயலாளர் நியமனம்: தேர்தல் ஆணையம் உத்தரவு
16 Mar 2026கொல்கத்தா, மேற்கு வங்க மாநிலத்தின் புதிய தலைமைச் செயலாளராக துஷ்யந்த் நாரியாலாவை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
நேபாளத்தில் சாலை விபத்தில் பலியான 7 பேர் உடல்களை கொண்டு வர தமிழ்நாடு அரசு நடவடிக்கை
16 Mar 2026சென்னை, நேபாளத்துக்கு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டபோது சாலை விபத்தில் சிக்கி 7 தமிழா்கள் உயிரிழந்தனா்.
-
மத்திய கிழக்கில் மோதலால் 4,335 இந்திய விமானங்கள் ரத்து: மத்திய அரசு தகவல்
16 Mar 2026புதுடெல்லி, மேற்காசிய மோதலால் காரணமாக இந்திய விமானங்கள் ரத்து குறித்து மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சா? வதந்திகளை நம்ப வேண்டாம் என த.வெ.க. திட்டவட்டமாக மறுப்பு
16 Mar 2026சென்னை, தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், பா.ஜ.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானதற்கு அக்கட்சியின்
-
சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் நேற்று நடைபெற்ற ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை ஒன் பேட்டில் ஆஃப்டர் அனத
-
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு : சென்னையில் விசாரணையை நடத்த சி.பி.ஐ.க்கு விஜய் கடிதம்
16 Mar 2026சென்னை, கரூா் கூட்ட நெரிசல் வழக்கில் சென்னை அல்லது தமிழ்நாட்டில் ஏதேனும் ஓரிடத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சி.பி.ஐ.
-
பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்: ஆஸ்கர் விழா மேடையில் ஹாலிவுட் நடிகர் ஜேவியரின் பேச்சால் பரபரப்பு
16 Mar 2026லாஸ்ஏஞ்சல்ஸ், ஹாலிவுட் நடிகர் ஜேவியர் பார்டெம் ஆஸ்கர் விருது விழாவில், “போர் வேண்டாம். பாலஸ்தீனத்துக்கு விடுதலை வேண்டும்” எனப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
-
த.வெ.க. - என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை பேச்சு நடத்தப்படவில்லை: செங்கோட்டையன் பேட்டி
16 Mar 2026கோவை, தமிழக வெற்றிக்கழகம் மற்றும் என்.டி.ஏ. கூட்டணி குறித்து இதுவரை எந்த விதமான கருத்து பரிமாற்றமும் நடைபெறவில்லை என்று த.வெ.க.
-
திருப்பூரில் இருவேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இல்லாத 41 லட்சம் ரூபாய் பறிமுதல்: தேர்தல் பறக்கும் பட்டையினர் நடவடிக்கை
16 Mar 2026திருப்பூர், திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்து செல்லப்பட்ட ரூ. 41 லட்சம் தேர்தல் பறக்கும் பட்டையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
-
தேர்தல் நடத்தை விதி அமல் எதிரொலி: மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனுக்கள் பெட்டி
16 Mar 2026கோவை, தேர்தல் நடத்தை விதி அமலில் இருப்பதால் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பொதுமக்கள் குறைதீர் மனு பெட்டி வைக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
16 Mar 2026- மன்னார்குடி ராஜகோபலசுவாமி தங்க சூரிய பிரபை வேணுகோபாலன் திருக்கோலமாய் காட்சி.
- தொட்டியம் காளியம்மன் பவனி


