முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்ய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு வட கொரியா திரும்பினார் அதிபர் கிம் ஜாங் அன்

திங்கட்கிழமை, 18 செப்டம்பர் 2023      உலகம்
KIM 2023-09-18

Source: provided

பியாங்கியாங் : வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது 6 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினார். 

கடந்த வாரம் தலைநகர் பியாங்கியாங்கில் இருந்து சிறப்பு ரயில் மூலம் வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் ரஷ்யா சென்றார். அவருடன் வடகொரியாவின் ராணுவ உயர் அதிகாரிகளும் சென்றனர். அங்கு சென்ற அவர் ரஷ்ய அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ரஷ்யாவிற்கு தனது ஆதரவை தெரிவித்தார். அதன்பிறகு ரஷ்யாவின் ஆயுத தொழிற்சாலைகளுக்கு சென்று, ஆயுதங்களை பார்வையிட்டார். 

இந்தப் பயணத்தில் அதிபர் புடின், ராணுவ அமைச்சர் செர்ஜி ஷோய்கு மற்றும் பிற ராணுவ உயர் அதிகாரிகளை கிம் ஜாங் அன் சந்தித்துப் பேசினார். விளாடிவோஸ்டாக்கில் உள்ள ராணுவ தளத்துக்கு சென்ற அவர்கள், ரஷ்யாவின் ராணுவ திறன்கள் மற்றும் ஆயுதங்கள் குறித்து கிம் ஜாங் அன்னுக்கு விளக்கம் அளித்தனர். 

ரஷ்யாவின் முக்கிய விண்வெளி தளங்களுக்கும் சென்று அவர் பார்வையிட்டார். மேலும் ரஷ்யாவுக்கு ஆயுத பரிமாற்ற ஒப்பந்தம், ராணுவத்துக்கு இடையேயான மூலோபாய மற்றும் தந்திரோபாய ஒருங்கிணைப்பு போன்றவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர். 

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் தனது 6 நாள் ரஷ்ய பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று முன்தினம் நாடு திரும்பினார். கொரோனா ஊரடங்குக்கு பின்னர் கிம் ஜாங் உன் மேற்கொண்ட முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து