முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புஜாரா உள்பட 4 வீரர்கள் சஸ்பெண்ட்

செவ்வாய்க்கிழமை, 19 செப்டம்பர் 2023      விளையாட்டு
Pujara 2023-09-19

Source: provided

கடந்த வாரம் லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிராக சசெக்ஸ் அணி ஆடிய இங்கிலிஷ் கவுன்ட்டி கிரிக்கெட்டில் வீரர்களுக்குள்ளே தள்ளுமுள்ளும், துடுக்குத்தனமான பேச்சும், நடுவர்களிடம் அளவுக்கதிகமாக முறையீடு செய்ததும் நடந்தது. இதன் மீது விசாரணை மேற்கொண்ட இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது சசெக்ஸ் அணியின் கேப்டன் புஜாரா உள்பட 4 வீரர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து டிவிஷன் 1-க்கு முன்னேறும் வாய்ப்பு சசெக்ஸ் அணிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதோடு மட்டுமல்லாமல் மோசமான நடத்தைக் காரணமாக 12 புள்ளிகளையும் பறிகொடுத்தது சசெக்ஸ். கேப்டன் புஜாரா, அதிக விக்கெட்களை வீழ்த்திய ஆரி கர்வேலஸ், இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு ஆடும் இரண்டு சூரப்புலி வீரர்களான டாம் ஹெய்ன்ஸ், ஜாக் கார்சன் ஆகியோர் மீது இந்த சீசன் முழுவதும் பல்வேறு நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்தது. குறிப்பாக லெய்செஸ்டர்ஷைர் அணிக்கு எதிரான போட்டியில் மோசமாக நடந்து கொண்டதாலும், கேப்டன் புஜாரா தனது அணி வீரர்களைக் கட்டுப்படுத்தத் தவறியதாலும் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

______________

தங்கம் வென்றார் இளவேனில் வாலறிவன்

உலகக்கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டிகள் பிரேசிலின் ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இந்திய அணி சார்பில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். இதில் நடந்த இறுதிப்போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபில் பிரிவில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்றார். 

அவர் 252.2 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். பிரேசிலில் நடைபெறும் உலகக்கோப்பை துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் இந்திய அணி பெறும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் வென்ற இளவேனிலுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.  

______________

வைரலாகும் சஞ்சு சாம்சனின் பதிவு

13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன் 390 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 55.71 என்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய கோப்பை, உலகக் கோப்பை, ஆசிய போட்டிகள் என எதிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை.  உலகக் கோப்பைக்கு முன்னதாக ஆஸ்திரேலியா அணியுடன் 3 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. அதற்கான அணியை பிசிசிஐ அறிவித்தது.முதலிரண்டு போட்டிகளில் கே.எல்.ராகுல் தலைமையில் இளம் இந்திய அணி களமிறங்குகிறது. 3வது போட்டியில் ரோஹித் தலைமையில் களமிறங்குகிறது. இதில் எந்த அணியிலும் சஞ்சு சாம்சன் தேர்வாகவில்லை. 

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் சஞ்சு சாம்சன் சோகம் கலந்த சிரிக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு வைரலாகி வருகிறது. கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாம்சன், “இதுதான் நான். இங்கிருந்து நான் முன்னேற நினைக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். அதில் தான் பேட்டிங் விளையாடும் புகைப்படத்தினையும் பதிவிட்டுள்ளார்.  முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், “நான் சஞ்சு சாம்சன் நிலையில் இருந்தால் நிச்சயமாக ஏமாற்றமடைந்திருப்பேன்” எனப் பதிவிட்டுள்ளார். பலரும் சாம்சனுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 2 hours ago
View all comments

வாசகர் கருத்து