முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர் கட்சிகளின் இன்டியா கூட்டணியிலிருந்து சி.பி.எம். கட்சி திடீர் விலகல்

புதன்கிழமை, 20 செப்டம்பர் 2023      இந்தியா
CPM- 2023-09-20

Source: provided

டெல்லி : எதிர் கட்சிகளின் இன்டியா கூட்டணியிலிருந்து சி.பி.எம். கட்சி  விலகியுள்ளது.

தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்நிலையில் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க. கூட்டணியை எதிர் கொள்வதற்காக பல்வேறு எதிர்கட்சிகளை கொண்ட கூட்டணியை காங்கிரஸ் கட்சி உட்பட பல்வேறு கட்சிகள் இணைந்து உருவாக்கின. இந்த கூட்டணியில் மொத்தம் 28 கட்சிகள் இருந்தன. இதற்கு எதிர்கட்சிகள் 'இன்டியா' என பெயரிட்டுள்ளன. இந்த கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டம் ஜூன் 23 ல் பீகாரின் தலைநகர் பாட்னாவிலும் இரண்டாவது கூட்டம் ஜூலை 19 ல் பெங்களூருவிலும் மற்றும் மூன்றாவது கூட்டம் செப்டம்பர் 1ல் மும்பையிலும் நடைபெற்றன.

இந்த 3 கூட்டங்களிலும் சிபிஎம் கட்சி கலந்து கொண்டது. இந்நிலையில் தற்போது இன்டியா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது. இந்த முடிவானது செப்டம்பர் 17 ல் டெல்லியில் நடந்த சிபிஎம் கட்சியின் பொலிட் பீரோ  கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் பிரகாஷ் காரத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிவசேனா கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியாது. தேர்தலுக்கு பின்னர் பாஜக ஆட்சிக்கு வராமல் தடுக்க கூட்டணிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் பல ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகள் மாறி மாறி ஆட்சி செய்துவருகின்றன. மேலும் மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சிபிஎம் கட்சிகளுக்கிடையே மோதல் போக்குகள் தொடர்ந்துவருகின்றன. தற்போது கேரளாவில் தொகுதி பங்கீடு பற்றிய கேள்விக்கு கேரள மாநில சிபிஎம் கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எனவே இன்டியா கூட்டணியில் இருந்து விலகுவதாக சிபிஎம் கட்சி அறிவித்துள்ளது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 2 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து