முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உங்கள் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது? - நடிகர் விஷாலுக்கு ஐகோர்ட் கண்டிப்பு

வெள்ளிக்கிழமை, 22 செப்டம்பர் 2023      சினிமா
chennai-high-court 2022-08-29

Source: provided

சென்னை : உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது என்று நடிகர் விஷாலை சென்னை ஐகோர்ட் நீதிபதி கண்டித்தார். 

நடிகா் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்துக்காக சினிமா பைனான்சியா் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூ. 21 கோடியே 29 லட்சம் கடனை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. 

அந்தத் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தை மீறி, வீரமே வாகை சூடும் என்ற படத்தை வெளியிட்டதற்காக விஷால் நிறுவனத்துக்கு எதிராக, லைகா நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடா்ந்தது.

வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ.15 கோடியை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தாா். இந்த உத்தரவை உறுதி செய்த இரு நீதிபதிகள் அமா்வு, தொகையை செலுத்தாவிட்டால், தனி நீதிபதி முன் உள்ள வழக்கில் தீா்ப்பு வரும் வரை விஷால் தயாரிக்கும் படங்களை திரையரங்கங்கள் அல்லது ஓடிடி தளத்தில் வெளியிடக்கூடாது என தடைவிதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, நடிகா் விஷால் நேரில் ஆஜராகியிருந்தாா். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதி, விஷாலின் நான்கு வங்கிக் கணக்குகளில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரைக்குமான கணக்கு விவரங்களையும், விஷாலுக்கு சொந்தமான அசையும், அசையா சொத்து விவரங்கள், அவை எப்போது வாங்கப்பட்டன என்பதையும் சொத்து ஆவணங்களுடன் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தாா்.

இந்த வழக்கில் நேற்று நேரில் ஆஜராஜ விஷால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை. இதற்கான காரணமாக, வங்கியில் இருந்து சொத்து விவரங்களைப் பெற தாமதமாகி விட்டது. இதனை தாக்கல் செய்ய 6 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.  மேலும், என் வீடு அடமானத்தில் இருக்கிறது என விஷால் தரப்பிலிருந்து கூறப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா, நீதிமன்றத்தை விட பெரிய ஆள் என விஷால் எண்ண வேண்டாம். நீதிமன்றம் முன் அனைவரும் சமம்.  உங்கள் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக் கூடாது? எனக் கண்டிப்புடன் கூறிய பின், சொத்து விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்து விஷால் நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கும் அளித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 5 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து