முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகாவில் கூடுதல் மது கடைகளை திறக்க அரசு முடிவு

திங்கட்கிழமை, 25 செப்டம்பர் 2023      இந்தியா
Mathu 2023 04 15

Source: provided

பெங்களூரு : கர்நாடகாவில் கூடுதல் மதுக்கடைகளை திறக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

கர்நாடக கலால் துறை அதிகாரிகளுடன் முதல்வர்  சித்தராமையா ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் உள்ள 379 எம்.எஸ்.ஐ.எல்., மதுக்கடைகளை புதிதாக ஏலம் விடுவது, உரிமம் புதுப்பிப்புக்கு 4 மடங்கு அதிகமாக கட்டணம் நிர்ணயிப்பது. அதற்காக கலால் சட்டத்தில் திருத்தம் செய்வது, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ன் படி, 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட கிராம பஞ்சாயத்தில் மதுபான கடை திறக்க கலால் உரிமம் வழங்க வேண்டும் என்ற விதியை தளர்த்தி, 3 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் உரிமம் வழங்குவது என மாற்றுவது உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. 

பொதுவாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி, 5 ஆயிரம் மக்கள் தொகை உள்ள கிராம பஞ்சாயத்துகளில் மதுபான கடைகள் திறக்கலாம் என உத்தரவு உள்ளது. இதை மனதில் வைத்து, 1000 மதுக் கடைகள் திறக்க கர்நாடக அரசு ஏற்கனவே அனுமதி அளித்துள்ளது. இனிமேல் 3 ஆயிரம் மக்கள் தொகை என கொண்டு வந்தால், பல கிராம பஞ்சாயத்துகளில் கூடுதலாக கடைகள் திறக்கப்படும். அரசின் இந்த முடிவுக்கு, மதசார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து