எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
ஹாங்சோவ் : 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் முன்தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
2-வது நாளான நேற்று முன் தினம் இந்தியா 5 பதக்கங்களை அறுவடை செய்தது. இந்தியாவுக்கு முதலாவது பதக்கத்தை துப்பாக்கி சுடுதல் வீராங்கனைகள் 'சுட்டு' தந்தனர். பெண்கள் அணிக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் ரமிதா, மெகுலி கோஷ், ஆஷி சோக்சே ஆகியோர் அடங்கிய இந்திய அணி மொத்தம் 1,886 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பெற்று வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. 1896.5 புள்ளிகளுடன் சீனா முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர் பிரிவிலும் அரியானாவைச் சேர்ந்த 19 வயதான ரமிதா பதக்கமேடையில் ஏறினார். அவர் 230.1 புள்ளிகளுடன் 3-வது இடத்தை பிடித்து வெண்கலப்பதக்கத்தை கழுத்தில் ஏந்தினார். இவர் சென்னையில் நேகா சவானிடம் பயிற்சி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. மெகுலி கோஷ் 208.3 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு சரிந்தார். சீன வீராங்கனை யுதிங் ஹூவாங் 252.7 புள்ளிகளுடன் ஆசிய விளையாட்டு சாதனையுடன் தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார்.
துடுப்பு படகு போட்டியில் 'டபுள்ஸ் ஸ்கல்' பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் லால் ஜாட் - அரவிந்த் சிங் ஜோடி 2 ஆயிரம் மீட்டர் தூரத்தை 6 நிமிடம் 28.18 வினாடிகளில் எட்டிப்பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வசப்படுத்தியது. சீனாவின் ஜூன்ஜி பேன்-மேன் சூன் இணை முதலிடத்தை (6 நிமிடம் 23.16 வினாடி) பிடித்தது. இதே போல் துடுப்பு படகு ஜோடி பிரிவில் இந்தியாவின் பாபு லால் யாதவ் - லேக் ராம் இணை (6 நிமிடம் 50.41 வினாடி) வெண்கலப்பதக்கத்தை பெற்றது.
8 பேர் கொண்ட அணியினர் துடுப்பு படகை செலுத்தும் பந்தயத்தில் இந்தியா 2 ஆயிரம் மீட்டர் இலக்கை 5 நிமிடம் 43.01 வினாடிகளில் 2-வதாக கடந்து வெள்ளிப்பதக்கத்தை சுவைத்தது. நீரஜ், நரேஷ், ஜஸ்விந்தர் உள்ளிட்டோர் அடங்கிய இந்திய குழுவை விட 2.84 வினாடி முந்திய சீனாவுக்கு தங்கப்பதக்கம் கிட்டியது. ஆண்கள் பிரிவு கைப்பந்தில் லீக் சுற்றில் கலக்கிய இந்தியாவின் 'வீறுநடை' கால்இறுதியுடன் முடிவுக்கு வந்தது. 8 முறை ஆசிய சாம்பியனான ஜப்பான் 25-16, 25-18, 25-17 என்ற நேர் செட் கணக்கில் இந்திய அணியை தோற்கடித்தது. ஆண்கள் ஆக்கியில் கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் இன்றி களம் புகுந்த இந்தியா 16-0 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தானை (ஏ பிரிவு) ஊதித்தள்ளியது. லலித் குமார் உபாத்யாய் 4 கோலும், மன்தீப்சிங், வருண்குமார் தலா 3 கோலும் அடித்தனர். இந்திய அணி அடுத்து சிங்கப்பூரை நாளை சந்திக்கிறது. டென்னிசில் தொடக்க ஆட்டங்களில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்தது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சுமித் நாகல் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் லிங் ஹோ டின் மார்கோவை (மக்காவ்) பந்தாடினார். இரட்டையர் பிரிவில் சகெத் மைனெனி- ராம்குமார் கூட்டணி 6-2, 6-3 என்ற நேர் செட்டில் நேபாளத்தின் பிரதிப் கட்கா- அபிஷேக் பாஸ்டோலாவை போட்டுத் தாக்கினர். டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணிகள் பிரிவில் இந்தியா 3-2 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது. இதில் முதல் 4 ஆட்டங்கள் முடிவில் 2-2 என்று சமநிலையில் இருந்த போது, கடைசி ஒற்றையர் ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல் சரிவில் இருந்து மீண்டு வந்து 5-11, 7-11, 11-9, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் கஜகஸ்தானின் கென்ஜிகுலோவை சாய்த்தார். ஆனால் இந்த மகிழ்ச்சி அடுத்த சில மணி நேரங்களில் கரைந்து போனது. இதைத் தொடர்ந்து நடந்த கால்இறுதியில் இந்திய அணி 0-3 என்ற கணக்கில் தென்கொரியாவிடம் தோற்று பதக்க வாய்ப்பை கோட்டை விட்டது. இந்திய அணியில் ஹர்மீத் தேசாய், சத்யன், சரத்கமல் மூன்று பேரும் தோல்வி அடைந்தனர். இதன் பெண்கள் பிரிவில் இந்தியா 2-3 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோற்று வெளியேறியது. கால்பந்தில் பெண்கள் பிரிவில் இந்தியா 0-1 என்ற கோல் கணக்கில் (பி பிரிவு) தாய்லாந்திடம் பணிந்தது.
ஏற்கனவே சீனதைபேயிடம் தோற்று இருந்த இந்தியா கால்இறுதிவாய்ப்பை இழந்து நடையை கட்டியது. ஆண்கள் பிரிவில் இந்தியா- மியான்மர் இடையிலான ஆட்டம் 1-1 கோல் கணக்கில் 'டிரா'வில் முடிந்தது. தனது பிரிவில் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தை உறுதி செய்த இந்திய அணி 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றது. நாக்-அவுட் சுற்றில் இந்திய அணி சவுதிஅரேபியாவுடன் மோத இருக்கிறது.
பெண்கள் குத்துச்சண்டையில் 50 கிலோ உடல் எடைப்பிரிவில் உலக சாம்பியனான இந்தியாவின் நிகாத் ஜரீன் 5-0 என்ற கணக்கில் 2 முறை ஆசிய சாம்பியனான நுயேன் தி டேமை (வியட்நாம்) எளிதில் வீழ்த்தி கால்இறுதிக்கு முந்தைய சுற்றை எட்டினார். 54 கிலோ பிரிவில் பிரீத்தி பவாரும் வெற்றி பெற்றார். செஸ் போட்டியில் இந்திய கிராண்ட்மாஸ்டர் விதித் குஜராத்தி 2-வது சுற்றில் கஜகஸ்தானின் காஸிபெக் நோஜர்பெக்கிடம் அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.
பெண்கள் பிரிவில் கோனெரு ஹம்பி, ஹரிகா தங்களது முதல் இரு ரவுண்டில் வெற்றி கண்டனர். இந்த ஆசிய விளையாட்டின் முதல் தங்கப்பதக்கத்தை துடுப்புபடகு பந்தயத்தில் வென்ற சீனா துடுப்பு படகு, துப்பாக்கி சுடுதல், வுசூ, நீச்சலில் பதக்க வேட்டை நடத்தியது. 2-வது நாள் முடிவில் சீனா 20 தங்கம், 7 வெள்ளி, 3 வெண்கலம் என்று மொத்தம் 30 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. தென்கொரியா 5 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 14 பதக்கத்துடன் 2-வது இடத்தில் உள்ளது. இந்தியா 3 வெள்ளி, 2 வெண்கலப்பதக்கத்துடன் 7-வது இடத்தில் இருக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 10-05-2025
10 May 2025 -
இந்தியா - பாக். மோதலை கைவிட வேண்டும்: சீனா வலியுறுத்தல்
10 May 2025புதுடெல்லி : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் இரு நாடுகளும் அமைதியாகவும், நிதானமாகவும் இந்தச் சூழலில் இருந்து உரிய முறையில் சமுகத் த
-
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
10 May 2025வாஷிங்டன் : இந்தியாவும் பாகிஸ்தானும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டு உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
-
எஞ்சிய போட்டிகளை நடத்தி கொள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அழைப்பு
10 May 2025புதுடில்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர்ப் பதற்றம் காரணமாக ஒரு வாரத்திற்கு ஐ.பி.எல்.
-
ஆப்கன் மீது இந்தியா தாக்குதலா? - பாகிஸ்தான் குற்றச்சாட்டை மறுத்தது தலிபான் அரசு
10 May 2025ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிக்குள்ளும் நுழைந்து இந்தியா ஏவுகணைகளைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறியிருந்த குற்றச்சாட்டு உண்மையல்ல என்று ஆப்க
-
கடலூரில் வரும் 15-ம் தேதி கண்டன அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
10 May 2025சென்னை : அடிப்படை தேவைகளை நிறைவேற்ற தவறிய தி.மு.க.
-
வரும் 2030-க்குள் 50 ஆயிரம் மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தி செய்ய தமிழ்நாடு மின்வாரியம் இலக்கு
10 May 2025சென்னை, வரும் 2030-ம் ஆண்டுக்குள் சூரியசக்தி மின்னுற்பத்தி 50 ஆயிரம் மெகாவாட் அளவை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
-
நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது எப்படி? - அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை விளக்கம்
10 May 2025கிருஷ்ணகிரி : சி.பி.எஸ்.இ.
-
தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்கள் கற்றல் நிலை தேசிய சராசரியை விட சிறப்பாக உள்ளது : மாநில திட்டக்குழு தகவல்
10 May 2025சென்னை : தேசிய சராசரியைவிட தமிழகத்தில் 3, 5, 8-ம் வகுப்பு மாணவர்களின் கல்வித் தரம் சிறப்பாக உள்ளதாக மாநில திட்டக் குழு மற்றும் பள்ளிக்கல்வித் துறை இணைந்து நடத்திய கற்றல
-
ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: கண்ணீர் விட்ட பாக். எம்.பி.
10 May 2025பாகிஸ்தான், ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் குறித்து பாக். எம்.பி. கண்ணீர் விட்டது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பள்ளி மாணவா்களுக்கு வழங்க 4.19 கோடி பாடப்புத்தகங்கள் தயார் : பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
10 May 2025சென்னை : பள்ளி மாணவா்களுக்கு வழங்குவதற்காக 4.19 கோடி பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு அந்தந்த மாவட்ட கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
வதந்திகளை நம்ப வேண்டாம்: பஞ்சாப் முதல்வர் மான் அறிவுறுத்தல்
10 May 2025சண்டிகர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அதிகரித்துவரும் போர்ப் பதட்டங்களுக்கு மத்தியில் மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறி
-
32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஜாக்களுடன் ஊட்டியில் ரோஜா கண்காட்சி தொடங்கியது
10 May 2025ஊட்டி : ஊட்டியில் உள்ள அரசு ரோஜா பூங்காவில் 20-வது ரோஜா கண்காட்சி நேற்று தொடங்கியுள்ளது.
-
தேச ஒற்றுமைக்கான மக்கள் பேரணி: முதல்வருக்கு கவர்னர் ரவி பாராட்டு
10 May 2025சென்னை : தேசத்துடனான தமிழக மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் பிரமாண்ட மக்கள் பேரணியை நடத்துவதற்காக முதல்-அமைச்சருக்கு கவர்னர் ரவி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.
-
தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி : காஷ்மீர் அரசு அறிவிப்பு
10 May 2025ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரில் எல்லை தாண்டிய தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
-
பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி போட்டி மீண்டும் நடத்தப்படுமா?
10 May 2025தர்மசாலா : பாதியில் நிறுத்தப்பட்ட பஞ்சாப் - டில்லி ஐ.பி.எல். லீக் போட்டி மீண்டும் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
அப்பாவிகளை தாக்கிய பாகிஸ்தான்: அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு
10 May 2025புதுடெல்லி, பாகிஸ்தான் அப்பாவிகளை தாக்கி வருகிறது என வெளியுறவுத்துறை மந்திரி ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.
-
நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு
10 May 2025ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட
-
அவசர கால உதவிக்கான ஆள்சேர்ப்பு முகாம்: சண்டிகரில் பெருமளவில் திரண்ட இளைஞர்கள்..!
10 May 2025சண்டிகர் : இந்தியா - பாகிஸ்தானிடையே அதிகரித்து வரும் பதற்றத்துக்கு மத்தியில் சிவில் பாதுகாப்பு தன்னார்வலர்கள் சேர்க்கை மற்றும் பயிற்சி முகாம் தொடங்கியிருப்பதாக ச
-
நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறை
10 May 2025புதுடெல்லி : நிகழ்ச்சியில் சைரன் ஒலியை பயன்படுத்த ஊடகங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
பாகிஸ்தான் தாக்குதலில் 8 இந்திய வீரர்கள் காயம்
10 May 2025ஜம்மு : ஜம்முவில் பாகிஸ்தான் நடத்திய அத்துமீறியத் தாக்குதலில் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் 8 பேர் காயமடைந்தனர்.
-
பாக். ட்ரோன்களை தாக்கி அழித்த இந்திய ராணுவம்
10 May 2025புதுடெல்லி, பாக்கிஸ்தான் ட்ரோன்களை தாக்கி அழித்தது இந்திய ராணுவம்.
-
தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம்: மா.சுப்பிரமணியன் அறிவிப்பு
10 May 2025சென்னை, தமிழகத்தில் வாரந்தோறும் மருத்துவ முகாம் நடைபெறும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
-
பாகிஸ்தான் தாக்குதலில் எல்லையில் இதுவரை 22 போ் பலி
10 May 2025பாகிஸ்தான் : பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் எல்லையோர கிராமங்களைக் குறிவைத்து அந்
-
தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்
10 May 2025சென்னை : தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் மருந்துகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.