முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் இயங்காத நாள்: பைக்கில் பயணித்த அரியானா முதல்வர்

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      இந்தியா
Manohar-Lal-Qatar 2023-09-2

Source: provided

கவுகாத்தி : அரியானாவின் கர்னல் மாவட்டத்தில் கார் இயங்காத நாள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பைக்கில் பயணம் மேற்கொண்டார். 

அரியானா மாநிலத்தின் நிர்வாக தலைநகரமாக கர்னல் உள்ளது. இந்த மாவட்டத்தில் அவ்வப்போது காற்று மாசு ஏற்படுவதால் அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகின்றது.  

இந்த நிலையில், வாரம் தோறும் செவ்வாய்க்கிழமை கார் இயங்காத நாள் கடைபிடிக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் உத்தரவிட்டிருந்தார். 

அதன்படி, செவ்வாய்க்கிழமைகளில் சாலைகளில் கார் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அலுவலகத்துக்கு வரும் அரசு ஊழியர்கள் மிதிவண்டியில் வர உத்தரவிடப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நேற்று காலை வீட்டில் இருந்து கர்னல் விமான நிலையம் வரை முதல்வர் மனோகர் லால் கட்டார் பைக்கை ஓட்டி சென்றார். விமான நிலையத்துக்கு முதல்வர் மனோகர் லால் கட்டார் பைக்கில் செல்லும் வீடியோ சமூகவலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து