முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொறியியல் மாணவர்களுக்கு புதிய படிப்புகள் அறிமுகம் : அண்ணா பல்கலைக்கழகம் திட்டம்

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
Anna-University 1

Source: provided

சென்னை : பொறியியல் கல்லூரி மாணவர்களை எதிர்கால தொழில் தேவைகளுக்கு தயார்படுத்தும் வகையில் செயற்கை நுண்ணறிவு, இன்டர்நெட் ஆப் திங்ஸ், இயந்திர கற்றல், டேட்டா சயின்ஸ், விர்ச்சுவல் ரியாலிட்டி போன்ற வளர்ந்து வரும் படிப்புகளை அடுத்த செமஸ்டரில் இருந்து அறிமுகப்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் திட்டமிட்டு உள்ளது. 

இத்திட்டத்தின்படி அண்ணா பல்கலைக் கழகத்தின் சுமார் 320 இணைப்பு கல்லூரிகளில் 3-ம் ஆண்டு படிக்கும் சிவில் என்ஜினீயரிங் மற்றும் பிற கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் 6 மற்றும் 7-வது செமஸ்டரில் ஏதேனும் இரண்டை தேர்வு படிப்புகளாக படிக்க வேண்டும். 

வளர்ந்து வரும் பாடப் பிரிவுகளில் திறமையுள்ள முக்கிய பொறியியல் மாணவர்கள், தொழில்நுட்பங்கள் மட்டுமே எதிர்காலத்தில் நிறுவனங்களில் இடம்பெறும். தொழில் வல்லுனர்கள் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் கல்லூரிகளில் உள்ள மாணவர்களுக்கு இந்த படிப்புகளை எடுத்து செல்வார்கள் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் ஆர்.வேல்ராஜ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், 

இந்த நடவடிக்கையின் மூலம் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய பிரிவுகளில் படிக்கும் மாணவர்கள் பயன் அடைவார்கள். மேலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினீயரிங், ஐ.டி.க்கு ஒரு கட்டாய அனுபவ கற்றல் படிப்பை பல்கலைக் கழகம் திட்டமிட்டுள்ளது. 

மூன்றாம் ஆண்டில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் பிரிவு மாணவர்கள், திருத்தப்பட்ட பாடத்திட்டத்தின்கீழ் கணினி தொடர்பான கிளைகளில் படிக்கும் மாணவர்கள், டேட்டா சயின்ஸ், புல் ஸ்டேக் டெவலப்மென்ட், கிளவுட் கம்ப்யூட்டிங், சைபர் செக்யூரிட்டி போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் உள்ளிட்ட 7 சிறப்புகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். 

செயற்கை நுண்ணறிவு, எந்திர கற்றல், அனுபவ கற்றல் படிப்புகளை கொண்டு வருமாறு தொழில் துறைகளை நாங்கள் கேட்டு கொண்டு உள்ளோம். அங்கு மாணவர்கள் வழக்கு ஆய்வுகள், தொழில்துறை சிக்கல்களை தீர்ப்பது, திட்டங்களை செயல்படுத்தல் மூலம் கற்றுக் கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார். 

இந்த நிலையில் கணினி அறிவியல் மாணவர்களுக்கான திட்ட அடிப்படையிலான அனுபவ கற்றல், ஐ.டி. தயாரிப்பு நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் என்று அண்ணா பல்கலைக் கழகத்தின் தொழில் ஒத்துழைப்பு மையத்தின் முன்னாள் இயக்குனர் கலைச்செல்வன் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து