முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூத்துக்குடி அருகே தீவு பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை குழுமத்தினர் தீவிர சோதனை

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      தமிழகம்
Tuticorin 2023-09-26

Source: provided

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே தீவு பகுதிகளில் கடல்படை, வனத்துறை மற்றும் கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்த அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதியில் உள்ள தீவுப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தல் மற்றும் அந்நிய நபர்களின் ஊடுருவல் உள்ளதா என்பது குறித்து கடலோர பாதுகாப்பு படை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வனத்துறை அதிகாரிகள் ஆகியோர் கூட்டாக படகு மூலம் சென்று தீவிர சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி மன்னார் வளைகுடா கடல் பகுதி பல்வேறு தீவுகள் அமைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். வெளி நபர்கள் உள்ளே நுழைய தடை செய்யப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் சில அந்நிய நபர்கள் தீவு பகுதிகளில் சட்ட விரோதமாக உள்ளே நுழைந்து இலங்கைக்கு பல்வேறு பொருட்களை கடத்தி செல்வதாக கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் கிடைத்தது

இதைத் தொடர்ந்து மன்னார் வளைகுடா பகுதியில் அமைந்துள்ள வான் தீவு, காரைசல்லி தீவு, காசுவாரி தீவு உள்ளிட்ட தீவுப் பகுதிகளில் சட்டவிரோத கடத்தல் சம்பவங்கள் நடைபெறுகிறதா? அந்நிய நபர்களின் ஊடுருவல் உள்ளதா? என்பதை கண்காணிக்கும் வகையிலும் இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இணைந்த குழுவினர் கடலோர பாதுகாப்பு குழும படகு மற்றும் வனத்துறை படகில் சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்,

இதில், கடலோர பாதுகாப்பு குழும துணை கண்காணிப்பாளர் பிரதாபன் தலைமையில் வேம்பார் கடல் காவல் நிலையம் ஆய்வாளர் சைரஸ், உதவி ஆய்வாளர்கள் முத்துமாரி தேவேந்திரர், தாமரைச்செல்வி, தூத்துக்குடி கடலோர காவல்படை அதிகாரிகள் மிசாகா, பிரமோத் அப்புக்குட்டன், வனத்துறை அதிகாரிகள் ஜினோபிளசில், ரேஞ்சர் (இன்ஸ்பெக்டர்) மதன்குமார், மற்றும் 25க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சோதனையில்  ஈடுபட்டு வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 4 days ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து