முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியாவுக்கு பயணிக்க பாகிஸ்தான் வீரர்களுக்கு 'விசா'

செவ்வாய்க்கிழமை, 26 செப்டம்பர் 2023      விளையாட்டு
Pak 2023-09-26

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் அடுத்த மாதம் 5-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ள பாகிஸ்தான் அணிக்கு விசா வழங்குவதில் இழுபறி நீடித்தது. இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகம் விசா வழங்குவதில் கால தாமதம் செய்வதாகவும், இது உலகக் கோப்பை போட்டிக்கு தங்கள் அணி தயாராவதில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) புகார் செய்தது.

இந்த நிலையில் விசா பிரச்சினை தீர்ந்தது. ஆனால் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகத்தான் அவர்களுக்கு 'விசா' கிடைத்திருக்கிறது. பாகிஸ்தான் அணி துபாய் வழியாக ஐதராபாத் செல்கிறது. 29-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கும் பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை சந்திக்கிறது.

பாகிஸ்தான் அணி முதலில் துபாய் சென்று அங்கு இரு நாட்கள் பயிற்சி எடுத்து விட்டு இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தது. ஆனால் 'விசா' தாமதத்தால் இந்த திட்டத்தை கைவிட வேண்டியதாகிவிட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து