முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

539 பயணிகளுடன் நெல்லையில் இருந்து சென்னை புறப்பட்ட வந்தே பாரத் ரயில்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      தமிழகம்
Vande-Bharat-train 2023-09-

Source: provided

நெல்லை : நெல்லையில் இருந்து நேற்று காலை 539 பயணிகளுடன் வந்தே பாரத் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. 

நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயிலை கடந்த 24-ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அன்றைய தினம் சிறப்பு ரயிலாக இயக்கப்பட்ட நிலையில், மறுநாள்(25-ம் தேதி) சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு நெல்லை வந்தடைந்தது. 

இந்நிலையில் நேற்று  ரயில்வே கால அட்டவணைப்படி நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு சென்னைக்கு வந்தே பாரத் ரயில் புறப்பட்டது. ஏற்கனவே இந்த ரயிலில் பயணிப்பதற்கான டிக்கெட்டுகள் பொங்கல் வரையிலும் விற்றுத் தீர்ந்து விட்ட நிலையில் நேற்று காலை நெல்லையில் இருந்து பயணிகளுடன் தனது பயணத்தை வந்தே பாரத் முதல் முறையாக தொடங்கியது. 

இந்த ரயிலில் எக்சிகியூட்டிவ் பெட்டியில் 24 பயணிகளும், சாதாரண ஏ.சி. பெட்டிகளில் 252 பயணிகளும் நெல்லையில் இருந்து பயணித்தனர். இதே போல் மதுரையில் இருந்து எக்சிகியூட்டிவ் பெட்டியில் 10 பேரும், சாதாரண ஏ.சி. பெட்டியில் 97 பேரும் சென்னைக்கு புறப்பட்டனர். 

முதல் நாளான நேற்று மொத்தமாக எக்சிகியூட்டிவ் பெட்டியில் 52 பேரும், சாதாரண ஏ.சி. பெட்டியில் 487 பேரும் என மொத்தம் 539 பேருடன் வந்தே பாரத் ரயில் சென்னைக்கு புறப்பட்டு சென்றது. 

மறுமார்க்கமாக நேற்று மதியம் 2.50 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கு ரயில் புறப்பட்டது.  அதிலும் இருக்கைகள் அனைத்தும் நிரம்பி விட்டன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து