முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி முருகன் கோவிலில் இன்று முதல் செல்போன் கொண்டு செல்ல தடை

சனிக்கிழமை, 30 செப்டம்பர் 2023      ஆன்மிகம்
Palani 2023-08-21

Source: provided

பழனி : பழனி மலைக்கோவிலுக்குள் பக்தா்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு செல்வதற்கு விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் கருவறையில் உள்ள நவபாஷாணத்தால் ஆன மூலவா் சிலை, தங்கக் கோபுரம், தங்கத் தோ், தங்க மயில் ஆகியவற்றை திருவிழாக் காலங்களில் சிலா் கைப்பேசியில் படமெடுத்து சமூக வலைதளங்களில் பரப்புகின்றனர். மலைக் கோயிலில் புகைப்படம் பிடிக்கக் கூடாது என பல இடங்களில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தாலும் பக்தா்கள் அவற்றைக் கண்டுகொள்ளவில்லை. 

இந்த நிலையில், அண்மையில் பலரும் மூலவரைப் படமெடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் முருக பக்தர் ஒருவர் வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கில் நீதிமன்றம் இந்து சமய அறநிலையத் துறைக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கியது. 

இதையடுத்து, அக்டோபா் 1-ம் தேதி முதல் பழனி மலைக் கோயிலுக்கு வரும் பக்தா்கள் கைப்பேசி, புகைப்பட கருவிகளைக் கொண்டு வர திருக்கோயில் நிா்வாகம் தடைவிதித்து அறிவிப்பு வெளியிட்டது.  

கைப்பேசி, புகைப்படக் கருவிகளைக் கொண்டு வரும் பக்தா்கள் படிவழிப் பாதை, வின்ச் நிலையம், ரோப்காா் நிலையங்களில் இதற்கென அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையங்களில் ஒரு கைப்பேசிக்கு ரூ. 5 கட்டணம் செலுத்தி, ஒப்படைத்து விட்டு செல்லவும், தரிசனம் முடிந்த பின்னா் அவற்றைப் பெற்றுக் கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டது. தற்போது இந்த தடை உத்தரவு பழனி மலை முருகன் கோயிலில் இன்று முதல் அமலுக்கு வருகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து