முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காசாவில் 2 பள்ளிகள் மீது குண்டுவீச்சு: 80 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 19 நவம்பர் 2023      உலகம்
Gaza 2023-11-19

Source: provided

காசா : காசாவில் 2 பள்ளிகள் மீது இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் 80 பேர் பலியாகினர். 

இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் ஒரு மாதத்துக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. ஹமாஸ் அமைப்பு நிர்வகித்து வரும் காசாமுனை பகுதி, இஸ்ரேலின் தாக்குதலில் நிர்மூலமாகி இருக்கிறது.காசாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 

வான்வழி தாக்குதலில் ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன. மேலும் வடக்கு காசாவுக்குள் இஸ்ரேல் ராணுவம் தரை வழியாக புகுந்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினர் பதுங்கியுள்ளதாக கூறி அகதிகள் முகாம், பள்ளிகள் மீதும் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்துகிறது.

இந்த நிலையில் இரண்டு பள்ளிகள் மீது குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. ஜபாலியா அகதிகள் முகாமில் ஐ.நா. சபை நடத்தும் அல்-பகுரா பள்ளியில் ஏராளமானோர் தஞ்சம் அடைந்து இருந்தனர். 

இந்த பள்ளி மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீசின. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் 80 பேர் பலியானார்கள். ஏராளமானோர் காயம் அடைந்தனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அதே போல் வடக்கு காசாவின் தால்-அல்-ஜாதார் பகுதியில் உள்ள பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதற்கிடையே பள்ளிகள் மீதான தாக்குதலில் இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு காசாவின் மிகப்பெரிய அகதிகள் முகாமான ஜபா லியா முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. நடத்தும் பள்ளியின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது போர்க்குற்றம் என்றும் ஐ.நா. சபையை திட்டமிட்டு அவமதிக்கும் செயல் என்றும் எகிப்து கண்டனம் தெரிவித்துள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 1 week ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து