முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிகின்றனர்: திருவண்ணாமலையில் இன்று மகா தீபத் திருவிழா: பாதுகாப்புப் பணியில் 13 ஆயிரம் போலீசார் குவிப்பு

சனிக்கிழமை, 25 நவம்பர் 2023      ஆன்மிகம்
Thiruvannamalai 2023 04 04

தி.மலை, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இன்று மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு அங்கு சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் குவிகின்றனர். இதனால் பாதுகாப்புப் பணியில் 13 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இத்தலத்தில் நடைபெறும் விழாக்களில் கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.  நிகழாண்டுக்கான தீபத் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பஞ்ச ரதங்களின் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான மகா தீபத் திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை-நவ.26) நடைபெறுகிறது. இதையொட்டி, அதிகாலை 2 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவர் ஸ்ரீஅருணாசலேஸ்வரர், மூலவர் ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறும். அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவர் சந்நிதியில் பரணி தீபம் ஏற்றப்படும். 

மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறம் உள்ள 2,668 அடி உயர மலையில் மகா தீபம் ஏற்றப்படும். இதேநேரத்தில், கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ஆண்டுக்கு ஒருமுறை 3 நிமிடங்கள் மட்டுமே காட்சி தரும் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். இரவு 10 மணிக்கு தங்க ரிஷப வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வருவர்.தீபத் திருவிழாவுக்கு தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட, கோயில் நிர்வாகத்தினர், காவல் துறையினர் செய்து வருகின்றனர். பாதுகாப்புப் பணியில் சுமார் 13 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

மகா தீபம் ஏற்றத் தேவையான மகா தீபக் கொப்பரையை, தீப நாட்டார் சமூகத்தினர் புதுப்பித்துள்ளனர். இந்தக் கொப்பரை கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 3,500 கிலோ முதல்தர நெய், தீபம் எரிவதற்காக திரியாகப் பயன்படுத்தப்படும் 11 ஆயிரம் மீட்டர் காடா துணி ஆகியவை கோயிலில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீசம்பந்த விநாயகர் சன்னதியில் காடா துணிக்கு வெள்ளிக்கிழமை சிறப்புப் பூஜை செய்யப்பட்டது. இவை அனைத்தும் நேற்று(நவ. 25) காலை 2,668 அடி உயர மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு வைக்கப்படும் மகா தீபக் கொப்பரைக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்தாண்டு கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago
View all comments

வாசகர் கருத்து