முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருப்பம் எதிரொலி: இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் மேலும் நீட்டிக்க வாய்ப்பு?

திங்கட்கிழமை, 27 நவம்பர் 2023      உலகம்
Gaza 2023-11-13

Source: provided

டெல்அவிவ் : இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் நேற்றோடு முடிவுக்கு வந்த நிலையில் அது மேலும் நீட்டிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, கடந்த வெள்ளிக்கிழமை முதல் போர் நிறுத்தப்பட்டது. கைதிகள் தங்கள் நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று போர் நிறுத்தத்தின் கடைசி நாள் என்பதால், இன்று முதல் போர் துவங்குமா அல்லது தற்காலிகப் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

'போர் நிறுத்தத்தை நீட்டிப்பதுதான் நமது இலக்கு. இன்னும் நிறைய பிணைக் கைதிகளை மீட்கவும், காஸாவில் உள்ள மக்களுக்கு நிறைய மனிதாபிமான உதவிகளை அனுப்புவதற்கும் போர் நிறுத்தம் மிகவும் அவசியமாக உள்ளது என அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து பிணைக் கைதிகளும் வெளியேறும்வரை போர் நிறுத்தத்தைத் தொடர விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். 

இன்னும் 2 முதல் 4 நாட்களுக்கு போரை நிறுத்த ஹமாஸ் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன் மூலம் மேலும் பல கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சர்வதேச நாடுகளும், இஸ்ரேல் பிணைக் கைதிகளின் குடும்பங்களும் இஸ்ரேலைப் போர் நிறுத்தத்தை நீட்டிக்க வலியுறுத்தி வருகின்றனர். மேலும், ஒரு நாளைக்கு 200 லாரி மனிதாபிமான உதவிகளை 2 மாதத்திற்கு அனுப்புவது மிகவும் அவசியம் என ஐ.நாவின் பாலஸ்தீன அகதிகளுக்கான செய்தித் தொடர்பாளர் அத்னான் அபு ஹன்சா தெரிவித்துள்ளார்.

“நாங்கள் வெற்றியடையும்வரை ஓயமாட்டோம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கடந்த ஞாயிறு அன்று தெரிவித்துள்ளார். போருக்குத் தேவையான ரூ. 900 கோடி பட்ஜெட்டை இஸ்ரேல் தயார் செய்து வைத்திருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும், பிரதமர் பிணைக் கைதிகள் அனைவரையும் விடுவித்து ஹமாஸ் அமைப்பை அழிக்க உறுதியேற்கும் காணொளி சமீபத்தில் அவரது அலுவலகத்தால் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 'எங்களை யாராலும் தடுக்க முடியாது, போரில் வெற்றி பெருவதற்கான வலிமை எங்களிடம் உள்ளது' எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து