எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சுல்தான்பூர் : அமித்ஷாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு உ.பி. கோர்ட் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் பிரசாரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பற்றி சில கருத்துக்களை தெரிவித்தார். அமித்ஷாவை கொலைக் குற்றவாளி என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராகுல்காந்தி மீது உத்தரபிரதேசத்தில் சுல்தான்பூர் மாவட்ட பா.ஜனதா தலைவர் விஜய் மிஸ்ரா எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சுல்தான்பூர் மாவட்ட எம்.பி. எம்.எல்.ஏ.க்களுக்கான கோர்ட் சம்மன் அனுப்பி உள்ளது. அதில் ராகுல்காந்தி, வருகிற 16-ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக விஜய் மிஸ்ரா கூறும்போது, "இந்த சம்பவம் நடந்தபோது பா.ஜனதா துணைத்தலைவராக இருந்தேன். பெங்களூருவில் அமித்ஷாவை ஒரு கொலைகாரர் என்று ராகுல்காந்தி குற்றம்சாட்டினார். இதனால் நான் மிகவும் வேதனையடைந்தேன். இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக வழக்கு நடந்து வந்த நிலையில் தற்போது முடிவு வந்துள்ளது" என்றார்.
ஏற்கனவே மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையை சூரத் கோர்ட்டு விதித்தது. இதையடுத்து அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்தார். இதில் அவரது தண்டனையை சுப்ரீம் கோர்ட் நிறுத்தி வைத்ததையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


